Posts

Showing posts from May, 2020

கொரோனா - பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காதது துரோகம் !

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றிவருகிறது. ** டாக்டர்கள், செவிலியர்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள். ** உறுதுணையாக போலீசார், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் செயலாற்றிவருகிறார்கள். **  ஆனால் வீட்டிலேயே இருந்து முடங்கிக் கிடந்த சாதாரண மக்களை அரசு கவனத்தில் கொள்ளவில்லை ! அரிசி, பருப்பு, எண்ணெய் கொடுத்தால் போதுமா ? வெறும் ஆயிரம் ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும் ? ** 67 நாட்கள் முடக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ரூ.10 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம் கொடுக்காதது மிகப்பெரிய துரோகம் ஆகும். இதற்கு மத்திய அரசு நிதி அளிக்காமல் பிரதமர் மோடி வீண் பெருமை பேசுவதை மக்கள் ஏற்கவில்லை !

கொரோனா அச்சம் தவிர்ப்பீர் ! விழிப்புணர்வே தேவை !

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வருவதாக செய்திகள் கூறுகின்றன. இதனால் மக்கள் மனதில் அச்சம் தோன்றியுள்ளது. இதற்காக யாரும் அஞ்சத்தேவையில்லை ! இதற்கு மருந்து இல்லையென்றாலும் மருத்துவ கண்காணிப்பு, சில தடுப்பு மாத்திரைகள், சுத்தம் -  சுகாதாரம் மூலம் ஏராளம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது இந்த நோய் விரைவில் விடைபெறும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது ! விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதை அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் !

தமிழகத்தில் நாளை பேருந்துகள் இயக்கம் !

அடுத்த ஊரடங்கு தொடர்பான தமிழக அரசு அறிவிப்புகள் - * தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு அனுமதி ! நாளை 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் . * 8ம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து சாப்பிடலாம் ! * சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தளர்வுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது !

ஜூன் 8 முதல் வழிபாட்டு தலங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி !

ஜூன் 1 முதல் ஊரடங்கை தளர்த்தும் விதிமுறைகளை  Unlock 0.1 என்ற பெயரில் மத்திய அரசு அறிவித்துள்ளது ! ** 8ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் இயங்கலாம். ** மாநிலங்கள் இடையே பயணிகள் - சரக்கு வாகனங்கள் இயக்க தடையில்லை ! இ - பாஸ் தேவையில்லை !

தமிழகத்திற்கு நாசகார வெட்டுக்கிளி வருமா ? துறை செயலர் பேட்டி

வட மாவட்டங்களில் பயிர்களை நாசப்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளி கூட்டம் தமிழகத்திற்கு வர வாய்ப்பு குறைவு ! -தலைமைச் செயலகத்தில் விவசாய துறை செயலர் ககன் சிங் பேடி பேட்டி.

தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 160 ஆனது !

தமிழகத்தில் கொரோனா இறப்பு எண்ணிக்கை  160 ஆனது ! ** குணமடைந்தோர் எண்ணிக்கை 12,000.

கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் தளர்வு ! -நிபுணர்கள் குழு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் ஜூன் 1 முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அளிக்கலாம் !  -மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை .

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை !

மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் நாளை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார் ! ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடைவதால்,  அடுத்து தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக விவாதிக்க இருக்கிறார் !

டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மீது ஜூன் 10 வரை நடவடிக்கை கூடாது ! -நீதிமன்றம்

தாழ்த்தப்பட்டோர் போல என்று கூறியதால் வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது ஜூன் 10 ம் தேதி வரை நடவடிக்கை கூடாது ! உயர்நீதிமன்றம் உத்தரவு.

அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவையில்லை ! -இந்தியா

அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவையில்லை ! சீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியா நிராகரிப்பு !

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10,000 வழங்க சோனியா கோரிக்கை !

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் ! - மத்திய அரசுக்கு  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்.

மதுரை, தேனி, சிவகங்கை மாவட்டங்களில் மழை !

தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்துள்ளது. மதுரை, தேனி, நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை முதலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது ! காரைக்குடியில் இடி மின்னலுடன் சுமார்  அரை மணி நேரம் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் !

ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை ஏற்புடையதா ?

கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அதனைப் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது மக்கள் மத்தியில் குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது! இருப்பினும் இதுபோன்ற ஆற்றல் மிகுந்த மாத்திரைகளை டாக்டர்களின் ஆலோசனையின் பேரில்தான் பயன்படுத்த வேண்டும் !

ஆன்லைனில் நீட் தேர்வு பயிற்சி !

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் நீட் தேர்வு பயிற்சி ! பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு. ** நீட் தேர்வினால் கிராமப்புற ஏழை மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவில்லை என திமுக உள்ளிட்ட முற்போக்கு கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன ! ** இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆன்லைனில் கற்கும் வசதி பல மாணவர்களுக்கு இல்லை என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள் !

ஜெயலலிதா சொத்துக்களுக்கு வாரிசு தீபா ! - நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களுக்கு வாரிசு அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா ! உயர்நீதிமன்றம் தீர்ப்பு .

இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தம் ! டிரம்ப் விருப்பம்

லடாக் எல்லைப் பிரச்சினையில் இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் !  -அமெரிக்க அதிபர் டிரம்ப் 

தமிழகம் - கொரோனா பரிசோதனை 11 ஆயிரம் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - இன்று 6 பேர் மரணம் ! 18,000 பேருக்கு பாதிப்பு ! பரிசோதனை இன்று மட்டும் 11,000 குணமடைந்தோர் எண்ணிக்கை 567 இன்று மட்டும் !

கொரோனா பரவலைத் தடுக்க ஒரு யோசனை !

ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். சீனாவில் ஊகான் மாகாணத்தில் தனி மருத்துவமனை அமைத்து சிகிச்சை அளித்தது போல், தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவமனை அமைத்து அதிகரிக்கும் கொரோனா பரவலைத் தடுக்கலாம் !

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை கவலை அளிக்கிறது !- உச்சநீதிமன்றம்

புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை கவலை அளிக்கிறது. அவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும்போது மத்திய- மாநில அரசுகள் அவர்களைப் பாதுகாப்பதில் தோல்வி அடைந்துவிட்டதையே காட்டுகிறது. அவர்களுக்கு  இலவசமாக போக்குவரத்து, உணவு, தங்குமிடம் வழங்க வேண்டும் ! - மத்திய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !

கடலூர் மாவட்டத்தில் தூர்வாறும் பணிக்கு நிதிஒதுக்கீடு !

கடலூர் மாவட்டத்தில் தூர்வாறும்  பணிக்கு முதல்வர் பழனிசாமி நிதி ஒதுக்கீடு !

பொது ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது !- ராகுல்காந்தி

பிரதமர் மோடி அறிவித்த பொது ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது !  அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. ஊரடங்கு அடுத்து மத்திய அரசு, புலம் பெயர் தொழிலாளர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் என்ன திட்டம் வைத்திருக்கிறது ? - காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு.

இலவச மின்சாரம் ரத்து -மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் !

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை ரத்து செய்ய முடிவு செய்துள்ள மத்திய பிஜேபி அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் ! சென்னையில் நடந்த போராட்டத்தில் முன்னாள் மாநில தலைவர்கள் இ.வி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி. திருநாவுக்கரசர், எம்.பி. வசந்தகுமார் பங்கேற்றனர் ! தடையை மீறி கும்பகோணத்தில் போராட்டம் நடத்திய மாநில தலைவர் அழகிரி மீது போலீசார் வழக்குப் பதிவு !

கொரோனாவிலிருந்து மீண்ட துணை ஆணையருக்கு வரவேற்பு !

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய துணை ஆணையருக்கு ஆணையர் விஸ்வநாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது !

நீலகிரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு !

வெப்பச் சலனம் காரணமாக,கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமனாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !

டாஸ்மாக் கடை திறக்க அத்திப்பட்டு பெண்கள் எதிர்ப்பு !

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அங்கு வந்த குடிமகன்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் !

தலைவர்கள் ரமளான் பெருநாள் வாழ்த்து !

நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போதனைகளின் படி அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் பேணுவோம் !  - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் , பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை முஸ்லிம் சமுதாயத்திற்கு தெரிவித்துள்ளனர் !

சவூதி அரேபியாவில் பெருநாள் தொழுகை !

சவூதி அரேபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை முதலான நாடுகளில் ஈதுல் பித்ரு பெருநாள் தொழுகை நடைபெற்றது! புனித மக்கா கஃபா பள்ளிவாசலில் மிக குறைந்த எண்ணிக்கையில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மட்டுமே சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனர் ! பலஸ்தீனம், புனித ஜெருசலம் நகரில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் மீளவும் மனிதகுல  நன்மைக்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனை புரிந்தனர் !

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் !- அமைச்சர் தங்கமணி

முதல்வர் விருப்பப்படி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் ! அமைச்சர் தங்கமணி பேட்டி.

செய்தித் துளிகள் !

** தமிழகத்தில் கொரோனா நோய்க்கு இன்று வரை 111 பேர் மரணம் ! ** இன்று தமிழகத்தில் 9 இடங்களில் 100 டிகிரி வெயில் காய்ந்தது !

ரமளான் சிறப்புக் கவிதை - உன் சகோதரனின் அழுகுரல் கேட்டதா ?

அன்புச் சகோதரா ! ரமளான் 30 நாள் நோன்பிருந்தாய்... உன் பசியை அல்ல, பிறர்தம் பசியை உணர்ந்தாயா...? ஐவேளைத் தொழுகை பொறுமை - இறையச்சம் பரிசாக அளித்ததா ? சகோதரத்துவம் ஒன்றும் வாய் வார்த்தையல்ல ! கொரோனா - வறுமை நோயை உற்பத்தி செய்தபோது ... உன் சகோதரனின் அழுகுரல் கேட்டதா ? அவன் கண்ணீர்   துடைக்க உன் கை நீண்டதா ? அக்கம் பக்கம்  உதவ முன்வந்தபோது... நீ வேடிக்கை மட்டும் பார்த்தாயோ ? ரமளானில் நீ வீசிய சில்லறைக் காசுகளை  அவர்கள் வரிசையாக நின்று பொறுக்கிச் சென்றனர் !   ஜகாத்  தாராளமாகக் கொடுத்திருந்தால் உன் சகோதரனுக்கு இந்த நிலை இருக்காது ! சொந்தக் காலில் நின்று -  பிறருக்கு ஜகாத் கொடுக்கும் நிலைக்கு  உயர்ந்திருப்பான் ! பெருநாள் கொண்டாட  பித்ரா  தானியங்கள் கொடுப்பது போலத் தானே எல்லா உதவிகளும்... இது ஈகைத் திருநாள் ! இதன் பொருள் உணர்ந்தால் அதுதான் பெருநாள் ! அனைத்து சகோதரர்களுக்கும் ஈதுல் ஃபித்ரு வாழ்த்துகள் ! ஈத் முபாரக் !    - ஜே.மீராமைதீன், மூத்த பத்திரிகையாளர்.         

கேட்ட நிதி கிடைக்கவில்லை ! மத்திய அரசு மீது முதல்வர் புகார் !

தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் கேட்ட நிதி- போதிய அளவில்  வழங்கப்படவில்லை ! - முதல்வர் பழனிசாமி வருத்தம்.

திங்கள்கிழமை ஈகைத் திருநாள் ! தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் இன்று பிறை தெரியாததால் திங்கட்கிழமை ஈதுல் பித்ரு பெருநாள் கொண்டாடப்படும் ! தமிழக அரசு தலைமை காஜி சலாஹுதீன் அய்யூப் அறிவிப்பு.

கொரோனா- தமிழகத்தில் ஒரே நாளில் 363 பேர் குணமடைந்தனர் !

தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா நோயிலிருந்து 363 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் !

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ! -முதல்வர்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது! வெளிநாடு - வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களுக்குத்தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது !  - முதல்வர் பழனிசாமி பேட்டி.

ஆர். எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன் !

திமுக நிர்வாகி ஆர்.எஸ்..பாரதி கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்   உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன ! இதற்கிடையே நீதிமன்றம் அவருக்கு  இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது ! தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகப் பேசியதாக கல்யாண்குமார் என்பவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

புயல் பாதிப்பு - ரூ.1000 கோடி நிவாரண உதவி !

ஆம்பன் புயல் மே.வங்கத்தை கடுமையாக தாக்கியதால் பல்வேறு இழப்புகளைச் சந்தித்துள்ளது ! நிவாரண உதவிகளுக்கு ரூ.1000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது !

உ.பி. பிஜேபி முதல்வருக்கு பிரியங்கா காந்தி கண்டனம் !

சொந்த ஊர் திரும்பும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் காங்கிரஸ் தலைவர்களைக் கைது செய்ததற்கு பொதுச்செயலாளர்  பிரியங்கா காந்தி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கண்டனம் தெரிவித்தார் ! வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல 1000 பேருந்துகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எந்த ஏற்பாடும் செய்யாத உ.பி. அரசு பேருந்துகளை சோதனை செய்வதாக கூறி காங்கிரஸ் தலைவர்கள் மீது புகார் தெரிவித்தது. மேலும் மாநில தலைவரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது !

மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்களிடம் அதிக வைரஸ் தொற்று !- விஜயபாஸ்கர்

மகாராஷ்டிராவிலிருந்து வருபவர்களில் அதிகமான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கோவிட் 19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! இருப்பினும் சிறப்பான சிகிச்சையால் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது! - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேட்டி.

உலக சுகாதார அமைப்பின் முக்கிய பதவியில் இந்தியர் !

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் நியமிக்கப்பட்டுள்ளார் !

விமான போக்குவரத்து 25ம் தேதி துவக்கம் !

வரும் 25ம் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்குகிறது !

செய்தித் துளிகள் !

முடிதிருத்துவோருக்கு உதவித் தொகை அறிவிப்பைத் தொடர்ந்து நெசவாளர்களுக்கும் ரூ.2000 வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் ! ** சென்னையில் கொரோனா விரட்டும் திட்டம் ! - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

மதச்சார்பற்ற கட்சித் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை !

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 22ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உட்பட  அனைத்து கட்சித் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார் ! 4 வது கட்ட ஊரடங்கு நடைபெறும் நிலையில் மத்திய பிஜேபி அரசு மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் 20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் என்ற பெயரில் பயனற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்தும் கொரோனா ஒழிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல் செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது !

பச்சை மண்டலங்களை சிவப்பு மண்டலமாக்காதீர் !

கொரோனா இல்லாத மாவட்டமானது திருவாரூர் ! ** இப்போது வெளிநாடு - வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புபவர்களால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இது புது சவாலாக உருவாகியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். எனவே இந்த நோயாளிகளை பச்சை மண்டலங்களில் வைத்து சிகிச்சை செய்யாமல் தனி சிறப்பு மருத்துவமனைகளில் கவனிக்கலாம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது !

புத்திமதி பொதுமக்களுக்கு மட்டும்தானா ?!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார் ! அவரைச் சுற்றி கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள்  ' கூட்டமாக ' சமூக இடைவெளியின்றி நின்றனர் ! பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று புத்திமதி கூறும் அமைச்சரும் அதிகாரிகளும் முதலில் தாங்கள் அதனைப் பின்பற்றலாமே ?!!

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு !

10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. ஜூன் 1ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு தேர்வு  ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ! முன்னதாக இதுகுறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன்  ஆலோசனை நடத்தினார். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமான ராயபுரம் மண்டலம்!

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான்  கொரோனா பாதிப்பு அதிகம் ! ( 1200 பேர் ) அதிக கூட்டம் கூடுவதால் கொத்தவால்சாவடி சந்தை மூடப்படுகிறது ! கோடம்பாக்கம் மண்டலத்தில் வைரஸ் பாதிப்பு 1000ஐ தாண்டியது !

காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு !

காரைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது ! நேற்று இரவு இடி மின்னலுடன் அரை மணிநேரம் மழை பெய்தது. இதை சாக்காக வைத்து காரைக்குடி இலுப்பக்குடி பொன்நகர் போன்ற பகுதிகளில் இரவு முழுவதும் காலை 9 மணிவரை மின்சாரம் நிறுத்தப்பட்டது ! பின்னர் விடப்பட்ட மின்சாரம் இடையிடையே காணாமல் போய்விட்டது. இப்போது இன்று மாலை 6 மணி முதல் மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்படும் சாக்கோட்டை மின் நிலைய பொறியாளர்கள் பதில் சொல்வார்களா ?

கேரளா - கர்நாடகா வழிகாட்டுகின்றன !

கேரளா - கர்நாடகாவில் தனியார் - அரசு பேருந்துகள் இயங்க அனுமதி ! * கர்நாடகாவில் 10 லட்சம் பேருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு !

ஆம்பன் புயல் நாளை வங்காளம் நோக்கி கரை கடக்கிறது !

ஆம்பன் புயல் அதி தீவிர புயலாக மாறி வலுவிழக்கிறது. ஒடிசா வழியாக மே.வங்கம்- வங்காள தேசம் நோக்கி நாளை மாலை கரை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு  ! தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது ! மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை ! ( 19  மே 2020 )

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் !

விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு கண்டனம் ! பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் !

மக்களுக்கு பிழைக்க வழிகாட்டுங்கள் !

மக்களின் விருப்பமின்றியே ஊரடங்கு மீண்டும் மீண்டும் திணிக்கப்படுகிறது. * கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. ஆனால் வீட்டிலேயே முடங்கி தியாகம் செய்த ஏழை - நடுத்தர மக்களுக்கு எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. * மக்களின் சுதந்திரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு பஸ் விட்டது போல் அவர்களுக்கு எஜமானான மிஸ்டர் பொதுஜனத்துக்கு ஏன் பஸ் விடவில்லை ? *  கொரோனா அதிகமாக பரவி படிப்படியாக குறைந்துவிடும். எனவே ஊரடங்கு தேவையில்லை. தளர்வுகள் என்று சொல்லாமல்  மக்களுக்கு வாழ வழிகாட்டுங்கள் ! * முக கவசம், சமூக இடைவெளி, தூய்மைப் பணிகள் தொடரட்டும் ! * ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் ! * ஏழை - நடுத்தர மக்களுக்கு சுய தொழில் செய்து பிழைக்க குறைந்தது ரூ. 5 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் நீண்ட கால கடனாக வழங்க வேண்டும் ! - இவைதாம் பொதுமக்கள் விரும்புவது - சமூக ஆர்வலர்கள் கூறுவது !

காரைக்குடியில் இடி மின்னலுடன் பலத்த மழை !

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது ! ** வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாகியுள்ளது. அது ஒடிசா நோக்கி செல்கிறது.  அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்யும். கரூர், திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. ** குமரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது !

மத்திய அரசின் 20 லட்சம் கோடி திட்டம் பயனற்றது ! - ப.சிதம்பரம்

3 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரின் ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரத் திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவிவரும் நேரத்தில் ராணுவ ஆயுத தயாரிப்பு, பொதுத் துறை தனியார் மயமாக்கல் போன்ற அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன ! இவை வெற்று அறிவிப்புகள் தான் என்றும் ஏழை - நடுத்தர மக்களுக்கு  எந்த பயனும் இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார் !

ஊடகப் பார்வை - அலாவுதீன் தொடரில் குளறுபடி வசனம் !

ஜெய்ஹனுமான், விநாயகா போன்ற தொடர்கள் முழுக்க முழுக்க மதசம்பந்தமான தொடர்கள். அனுமாரின் ராம பக்தி, தாய்ப்பாசம், பிள்ளையாரின் சிறப்புகளை இந்த தொடர்கள் காட்சிப்படுத்துவது  தவறு அல்ல! ஆனால் சன் தொலைக்காட்சியில் இப்போது ஒளிபரப்பாகும் அலாவுதீன் என்ற தொடர் இஸ்லாமிய கலாச்சாரம் தொடர்புடையது. முஸ்லிம்கள் வணக்கம் என்று சொல்வதாக வெறித்தனமாக மொழிபெயர்த்த புண்ணியவான் யார் ? மறந்தும்கூட  அல்லாஹ் என்றோ அஸ்ஸலாமு அலைக்கும் என்றோ அலாவுதீன் கூறவில்லை ! சன் டிவிக்கு முஸ்லிம்கள் மீது என்ன கோபம் ? - மீராப்பிரியன்

ராகுல்காந்தி வலியுறுத்தல் !

இப்போது கடன் கொடுப்பது முக்கியமல்ல, ஏழை -புலம்பெயர் தொழிலாளர்கள் கையில் பணம் கொடுப்பதே முக்கியம் ! - ராகுல்காந்தி வலியுறுத்தல்.

புதிய சவால் - அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் !

வெளிமாநிலத்தில் சிக்கி இப்போது  தமிழகம் வந்தவர்களிடம் சோதனை செய்த அடிப்படையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது .  இது புதிய சவாலாக உள்ளது ! - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.

வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களை தனியாக கணக்கிட வேண்டும் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது ! இறப்பு 74 பேர் ! ** வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கான சோதனையைத் தனியாக செய்து,  பாதுகாக்கப்பட வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமாகிவிட்டது என கணக்கு காட்டி  மக்களைப் பயமுறுத்த வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் !

வடமாநில தொழிலாளர்கள் நடந்துசெல்ல வேண்டாம் !- முதல்வர்

வடமாநில தொழிலாளர்கள் நடந்துசெல்ல வேண்டாம் ! - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்.

சகோதரத்துவம் ஒன்றும் வாய் வார்த்தையல்ல !

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை நடுத்தர மக்களுக்கு ' ஒன்றிணைவோம் வா ! ' திட்டத்தின் மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்   விரிவான உதவிகளைச் செய்துவருகிறார். தொடர்ந்து அதிமுகவும் உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் உதவிகளைச் செய்துவருகின்றன. ஆனால், சமுதாய அமைப்புகள் என்ன நிவாரண உதவிகள் செய்துவருகின்றன என்பதை ஊடகங்களில் - முகநூல் போன்ற சமூக இணைய தளங்களில் காண முடியவில்லை ! பதிவு செய்தால் தான் இதுபோன்ற சேவைகள் பரவலாக செய்யப்படும் ! சகோதரத்துவம் ஒன்றும் வாய் வார்த்தையல்ல !

வங்காளதேசம் - பெரும் அகதி முகாமில் கொரோனா !

வங்காளதேசத்தில் 10 லட்சம் பேர் வசிக்கும் மிகப்பெரிய அகதிகள் முகாம் உள்ளது ! அதில் மியான்மர் ரோஹிங்கியா    முஸ்லிம்கள் உள்ளனர். அங்கு கொரோனா சிலருக்கு  பாதித்துள்ளதாக தகவல் !

முன்னாள் அமைச்சர் மகன் டி.பி. காஜா பீர் மைதீன் காலமானார் !

தமிழக முன்னாள் அமைச்சர் டி.பி.மைதீன் கான் மகன் காஜா பீர் மைதீன் காலமானார் ! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் .

விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ. 1 லட்சம் கோடி !

விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு ! * சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் ! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

ஏழைகளுக்கு ரூ.5000 வழங்க மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல் !

ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழைகள்- கூலித் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு குறைந்தது ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் ! - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல். ** கடைகளில் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் வாங்க பத்து பைசாகூட இல்லையே ! - ஒட்டிய வயிறுடன் ஏழை மக்கள்.

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவு ! -விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. * சோதனையில் பாதிப்பு அதிகம் தெரியவந்தாலும் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது ! இதற்கு தமிழக அரசின் திட்டமிட்ட நடவடிக்கை தான் காரணம் ! - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி .

தலைமை செயலாளர் மீது திமுக புகார் !

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அவமதித்து விட்டதாக கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார் ! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் ' ஒன்றிணைவோம் வா ! ' திட்டம் மூலம் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு உதவிகள் செய்யப்படுகிறது. தொலைபேசி மூலம் பெறப்பட்ட 1லட்சம் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் தலைமைச் செயலாளரை டி.ஆர்.பாலு தலைமையில்  திமுக எம்.பி.க்கள் சந்தித்தபோது அவர்  '' இது உங்கள் பிரச்சினை '' என்று அலட்சியமாக கூறியதாக புகார் எழுந்துள்ளது ! **  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உரிமைகளை மீறியதாக தலைமை செயலாளர் சண்முகம் மீது மக்களவை தலைவரிடம் டி.ஆர்.பாலு எம்.பி. புகார் அளித்துள்ளார் !

சி.ரங்கராஜன் தலைமையில் நிபுணர் குழு கூட்டம் !

தமிழகத்தில் பொருளாதார மேம்பாட்டுக்காக ரிசர்வு வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் நிபுணர்கள் குழுவின்  முதல் கூட்டம் இன்று நடைபெற்றது !  * இந்தக் குழு 3 மாதங்களில் அரசுக்கு அறிக்கை அளிக்கும் !

ஏழை மக்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடன் வழங்க கோரிக்கை !

கொரோனா தடுப்பில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றோ வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றோ கூற இயலாது ! தங்களை வீட்டிலேயே முடக்கி தியாகம் செய்த லட்சக்கணக்கான மக்கள் சம்பளமோ கூலியோ வேறு வருமானமோ இல்லாமல் 3 மாதங்களுக்கு மேலாக மிகவும் துன்பத்தில் சிக்கியுள்ளனர். *  அவர்களுக்கு ரேஷன்கார்டுகள், ஆதார்கார்டுகள் மூலம் உடனடியாக தலா  ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அல்லது சுய தொழில் தொடங்க மானியத்துடன் குறைந்த பட்சம் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். * பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி பொருளாதார திட்டத்தில் மேற்கண்ட நிதி உதவிகளைப் பெற்று தமிழக அரசு முனைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு !

கோவை, நாமக்கல் கொரோனா இல்லாத மாவட்டங்களாயின !

கோவை, நாமக்கல் ஆகியவை இன்று கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறின ! கடைசி நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பினர் ! * ஏற்கனவே ஈரோடு, சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது !

நலிவடைந்த சிறுதொழில் துறைக்கு ரூ.20,000 கோடி !

* ஊரடங்கு காலத்தில் நலிவடைந்த  சிறு தொழில்துறைக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு ! ** சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கீடு ! - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு !

ஜூன் மாதம் நடைபெறவுள்ள  10ம் வகுப்பு தேர்வு அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார் ! // கொரோனா நேரத்தில் தேர்வு நடத்துவற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு !

4வது கட்ட ஊரடங்கு ! - பிரதமர் மோடி அறிவிப்பு !

நான்காவது ஊரடங்கு பற்றி பிரதமர் மோடி இன்று இரவு ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். அது வித்தியாசமானதாக இருக்கும் என்றார் ! இதுகுறித்து 18ம் தேதி அறிவிப்பு வெளியாகும்.  20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் குறித்தும் அவர் கூறினார்.

கவிதை - உயிர்காக்கும் தேவதைகள் !

ஊசி போடுவது  ரத்த அழுத்தம் பார்ப்பது டாக்டர்களுக்கு உதவுவது மானிட்டர் பார்ப்பது... இவையெல்லாம்தான் செவிலியர் வேலையா ? நோயாளிகளை கண்ணும் கருத்துமாக கவனிப்பது என சுருக்கமாக சொல்லலாமா ? ஒரு புன்னகையுடன் நோயாளிகளுக்கு சேவை செய்யும் செவிலியர்கள் உயிர்காக்கும் தேவதைகள் ! அன்னை தெரசாவின் மறு பிம்பங்கள் ! அவர்களின் தொண்டு மதிப்போம் ! உலக செவிலியர் தின வாழ்த்துகள் !  - மீராப்பிரியன்  ( காயமடைந்த ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் உயிரைக் காப்பாற்றிய கைவிளக்கேந்திய தேவதை நைட்டிங்கேல் அம்மையார் நினைவாக உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது ! - ஆசிரியர் )

முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் !

எளிய முதல்வர் ! மக்களுக்கு சேவை செய்வதில் மகத்தான ஆர்வம் ! மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிறந்தநாள் இன்று ! வாழ்க பல்லாண்டு! தருக நல்லாட்சி ! - ஜே.மீராமைதீன், மூத்த பத்திரிகையாளர்.

கோவில்களில் பொதுமக்கள் வழிபட 15ம் தேதிக்குப் பின் முடிவு !

மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக 15ம் தேதிக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் ! நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் கொரோனா பாதித்து மரணம் 50ஐ தாண்டியது !

தமிழகத்தில் கொரோனா நோயால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியது !

தமிழகத்திற்கு ரூ.2000 கோடி - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை !

* மருத்துவ உபகரணங்கள்  வாங்குவது உட்பட கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.2000 கோடியை மத்திய அரசு  விடுவிக்க வேண்டும் ! ** அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கூடுதல் உணவு தானியங்கள் வழங்க வேண்டும். *** சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் வழங்க வேண்டும் ! - பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை .

டீக்கடைக்காரர்கள் அதிருப்தி - கோரிக்கை !

டீக்கடைகள் திறக்க அரசு அனுமதித்தபோதும் பார்சல் மட்டும் கொடுக்கலாம் என்ற நிபந்தனையால் வியாபாரம் பாதித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் புகார் கூறுகிறார்கள் ! அதிக கூட்டம் கூடாமல் சமூக இடைவெளி விட்டு கடையிலேயே டீ குடிக்க அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்களும் கடைக்கார்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் !

அன்னையர் தினம்; கண்ணீர் வடிக்கும் கவிதை !

பத்து மாதம் சுமந்து பெற்றதும் பாலூட்டுவதும் சீராட்டுவதும் சாதாரணம் என எண்ணும் பெருந்தன்மை ! பிள்ளைகளின் - பசி பொறுக்காததும் வலியறிந்து துடிப்பதும் வளர்ந்த பின்னும் குழந்தையாய் பாவித்து பராமரிப்பதும் தாயின் பாசம் ! தாயை மறப்பதுதான் பிள்ளைகளின் பாசம் ! எட்டி உதைத்தாலும் பாதம் பிடித்து '' உன் கால் வலிக்கும் செல்லமே...'' இன்று உலக அன்னையர்  தினமாமே? பெற்ற தாயைப் பட்டினி போட்டு பெண்டாட்டியுடன் சேர்ந்து வசைபாடி முதியோர்  இல்லம் சேர்க்கும் முதிராத பிள்ளைகளை மன்னிக்கும்  பாசத் தாய்க்காக... கண்ணீர் வடிக்கும் கவிதை இது ! - மீராப்பிரியன்

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை !

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்வதா ? முடிவுக்கு  கொண்டுவருவதா என்பது குறித்து பிரதமர் மோடி , மாநில முதல்வர்களுடன் நாளை ஆலோசனை  நடத்துகிறார் !

சென்னையில் காய்கறி விலை உயர்வுக்கு காரணம் என்ன ?

கோயம்பேடு பேரங்காடியில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவியதாக  ஊடகங்களில் செய்தி வெளியானதால் அரசு அதிகாரிகள் அதனை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்தார்கள். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மாதவரத்தில் பூ, பழம் சந்தை செயல்பட ஏற்பாடு செய்தனர். பின்னர் காய்கறி மொத்த வியாபார சந்தையை திருமழிசைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டது. இதுபோன்ற அவசர முடிவுகளால் காய்கறி விலை உயர்ந்துள்ளது என கோயம்பேடு வியாபாரிகள் குற்றச்சாட்டு கூறுகிறார்கள் ! திருமழிசை சந்தை இன்றும் திறக்கப்படாததால் வியாபாரிகள் - பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் !

தமிழகத்தில் போலீசார் 107 பேருக்கு கொரோனா !

தமிழக முழுவதும் இதுவரை 107 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது !

மின்சார சட்ட திருத்த மசோதா - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் !

மத்திய அரசு கொண்டுவரும் மின்சார திருத்த சட்ட மசோதா மாநில உரிமைகளை பறிப்பதாகவும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும் உள்ளதால் அதனை வாபஸ் பெற வேண்டும் ! - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு ! மு.க.ஸ்டாலின் வரவேற்பு !

டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ! ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி ! இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் !

மத்திய அரசின் மின்சார சட்டம் - மு.க.ஸ்டாலின் கண்டனம் !

மாநில அரசுகளின் உரிமைகளை மறுக்கும் வகையில் மத்திய அரசு மின்சார திருத்தச் சட்டம் கொண்டு வந்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்! இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இதனை ஏற்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

விசாகையில் விஷவாயு கசிவு - மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !

ஆந்திரா விசாகப்பட்டினம் ஆலையில்  விஷவாயு கசிவு -12 பேர் சாவு ! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் ! // சத்தீஸ்கர் மாநிலத்திலும் விஷவாயு கசிவு விபத்து ஏற்பட்டது. பலர் காயம் ! // நெய்வேலி அனல் மின் நிலையத்திலும் பாய்லர் வெடித்து விபத்து - பலர் மருத்துவமனையில் அனுமதி !

கோயம்பேட்டிலிருந்து கொரோனா பரவியதாக எழுதாதீர்கள் ! - ராதாகிருஷ்ணன்

இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு பணி தமிழகத்தில்தான் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ! கொரோனா கோயம்பேட்டிலிருந்து பரவிவருகிறது என்று எழுதாதீர்கள் ! - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு வேண்டுகோள்.

டாஸ்மாக் கடைகள் திறப்பதை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் !

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறப்பதைக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி.க. தலைவர் திருமாவளவன் மற்றும் தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர் !

சிவகங்கையை பச்சை மண்டலமாக்க கோரிக்கை !

சிவகங்கை மாவட்டம் 12 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. 2, 3 வாரங்களாக எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும் தளர்வுகள் குறைவாக உள்ளன. எனவே முன்னோடி மாவட்டமாக திகழும் சிவகங்கை மாவட்டத்தை பச்சை மண்டலமாக மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் !  இந்த அடிப்படையில் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். பஸ் முதலான பொது போக்குவரத்து  இயக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர் !

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை ! -முதல்வர் பழனிசாமி

கொரோனாவை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை ! சென்னையில் கொரோனா பரிசோதனை வாகனம் வீடுகளுக்கே செல்ல ஏற்பாடு ! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

ஜூலை 26ல் நீட் தேர்வு !

மருத்துவப் படிப்புகளுக்கான  நீட் தேர்வு ஜூலை 26 ல் நடைபெறும் ! மத்திய அரசு அறிவிப்பு .

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் உதவி !

வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் கூலித் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில் செலவுகளை காங்கிரஸ் ஏற்கும் ! - சோனியா காந்தி அறிக்கை.

கோயம்பேடு கூலித் தொழிலாளர்கள் செய்த தவறு என்ன ?

டெல்லி  மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் கொரோனா பரவியது என முதலில் புரளி கிளப்பிவிட்டார்கள். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது ! இப்போது கோயம்பேடு தொழிலாளர்களால் தமிழக முழுவதும் கொரோனா பரவிவருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாவது நியாயமா ? அவர்கள் செய்த தவறுதான் என்ன ? உழைக்கும் தொழிலாளர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் !

3வது ஊரடங்கு தளர்வுகளுடன் தொடங்கியது !

3 வது ஊரடங்கு இன்று தொடங்கியது. சில சலுகைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை அண்ணா சாலை திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது ! ** தமிழக ஆரஞ்சு மண்டலங்களில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டன ! பல இடங்களில் துணிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை ! * கொரோனா இல்லாத மாவட்டமான சிவகங்கையில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இதனால் மக்கள் கூட்டமாக காணப்பட்டனர் ! காரைக்குடியிலும் பெரும்பாலும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன. மக்களும் கூட்டமாக திரண்டனர். ஏராளமான வாகனங்கள் காணப்பட்டன!

கொரோனா இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது !

சிவகங்கை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது! நேற்று (மே 2 ம் தேதி ) 12 நோயாளிகளில் கடைசி ஒரு நபர் குணமடைந்து சென்றுள்ளார் . ஆனால் ஊடகங்களில் சிவகங்கையில் கொரோனா பாதிப்பு 12 என்று காட்டுவது ஏனோ ?

மருத்துவமனைகள் மீது விமானப்படை மலர்தூவி வாழ்த்து!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் விமானப்படையினர் சென்னை உட்பட பல நகரங்களில் மருத்துவமனைகள் மீது மலர்களைத் தூவி வாழ்த்து தெரிவித்தனர் !

டெல்லி சிஆர்பிஎப் அலுவலகம் மூடப்பட்டது !

டெல்லி சிஆர்பிஎப் தலைமை அலுவலகம் மூடப்பட்டது ! அங்கு  135 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நடவடிக்கை !

ஊரடங்கு - பல சலுகைகளை அறிவித்தது தமிழக அரசு !

ஊரடங்கு 3ம் தேதிக்குப் பிறகும் தொடரும் என்று மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது !  * கட்டுமான தொழில், ஐ.டி. துறை, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகள், மின்னணு கடைகள், செல்போன் கடைகள் முதலான தனி கடைகள் இயங்க அனுமதி ! * பஸ்கள், ஆட்டோ, டாக்சிகள் இயங்க அனுமதி இல்லை ! ஆனால் மேற்கண்ட பொது போக்குவரத்தை குறைந்த எண்ணிக்கையிலாவது இயக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் !

பொருளாதார நடவடிக்கைகளே இன்றைய தேவை !

** கொரோனா சமூக பரவலாகி பின்னர் தான் குறையும் என்று டாக்டர் கள் ஊடகங்களில் கூறினார்கள். அப்படித்தான் இப்போது நடக்கிறது. ** எனவே அஞ்சத் தேவையில்லை, ஊரடங்கு என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்த தேவையில்லை ! ** ஆரஞ்சு மண்டலங்களில் அதிக பாதிப்பு இல்லாததால் அவற்றை பச்சை மண்டலங்களாக மாற்றி அனைத்து கடைகளையும்  திறக்கச் செய்ய வேண்டும். குறைந்த அளவு பொது  போக்குவரத்தை  ( பஸ், டாக்சி , ஆட்டோ முதலானவை ) அனுமதிக்க வேண்டும். ** வீட்டில் அடைந்து கிடக்கும் ஏழை - நடுத்தர மக்களுக்கு அரசு   உணவுப் பொருட்கள், பண உதவிகளை அவசியம் செய்ய வேண்டும். ** ஏழை மக்களுக்கு தொழில் தொடங்க  வங்கிகள் குறைந்த பட்சம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் !

மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு ! - மத்திய அரசு அறிவிப்பு

ஊரடங்கு மே 17 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு ! சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் சில தளர்வுகளை - சலுகைகளை அறிவித்துள்ளது.

முடங்கிய தொழிலாளர்களுக்கு விடியல் வர...!

லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் மே தினம் வந்துள்ளது. வேலை நேரம் 8 மணி என்பதை வரையறுத்து கொண்டாடும்  நாள் இது ! ஆனால் 12 மணி நேரம் சுரண்டி வேலை வாங்கும் கொடுமை பல நகரங்களில் சாதாரணம் ! தட்டிக்கேட்கும் தொழிற்சங்கங்கள், லேபர் ஆபீசர்ஸ் மவுனமாக... கொரோனா முடிந்தபிறகாவது இவர்கள் விழிப்பார்களா ? அனைத்து உழைக்கும் தோழர்களுக்கும் விடியல் பிறக்க... மே தின வாழ்த்துகள் ! - ஆசிரியர்,  ' உங்கள் செய்தி '

தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமனாதபுரம் முதலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு ! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு .

பாரம்பரிய இந்திய மருத்துவம் -விஜயகாந்த் யோசனை

கொரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய இந்திய மருத்துவத்தை சோதனை முறையில் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும் ! - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை .

மகாராஷ்டிராவில் மேலவைத் தேர்தல் !

மகாராஷ்டிராவில் மே 21 ல் மேலவை தேர்தல் ! முதல்வர் உத்தவ் தாக்கரே பதவியைக் காப்பாற்ற இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.

படிப்படியாகவே ஊரடங்கு தளர்த்த முடியும் ! -மருத்துவர் குழு

ஊரடங்கை படிப்படியாகத்தான்  தளர்த்த முடியும். ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் தளர்த்த வாய்ப்பு இல்லை ! - மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு அறிக்கை.