ரமளான் சிறப்புக் கவிதை - உன் சகோதரனின் அழுகுரல் கேட்டதா ?

அன்புச் சகோதரா !
ரமளான் 30 நாள்
நோன்பிருந்தாய்...
உன் பசியை அல்ல,
பிறர்தம் பசியை உணர்ந்தாயா...?
ஐவேளைத் தொழுகை
பொறுமை - இறையச்சம்
பரிசாக அளித்ததா ?
சகோதரத்துவம் ஒன்றும்
வாய் வார்த்தையல்ல !
கொரோனா -
வறுமை நோயை
உற்பத்தி செய்தபோது ...
உன் சகோதரனின்
அழுகுரல் கேட்டதா ?
அவன் கண்ணீர்   துடைக்க
உன் கை நீண்டதா ?
அக்கம் பக்கம்  உதவ
முன்வந்தபோது...
நீ வேடிக்கை மட்டும்
பார்த்தாயோ ?
ரமளானில் நீ வீசிய
சில்லறைக் காசுகளை 
அவர்கள் வரிசையாக நின்று
பொறுக்கிச் சென்றனர் !  
ஜகாத்  தாராளமாகக் கொடுத்திருந்தால்
உன் சகோதரனுக்கு
இந்த நிலை இருக்காது !
சொந்தக் காலில் நின்று -
 பிறருக்கு ஜகாத்
கொடுக்கும் நிலைக்கு 
உயர்ந்திருப்பான் !
பெருநாள் கொண்டாட 
பித்ரா தானியங்கள் கொடுப்பது
போலத் தானே எல்லா உதவிகளும்...
இது ஈகைத் திருநாள் !
இதன் பொருள் உணர்ந்தால்
அதுதான் பெருநாள் !
அனைத்து சகோதரர்களுக்கும்
ஈதுல் ஃபித்ரு வாழ்த்துகள் !
ஈத் முபாரக் !  
 - ஜே.மீராமைதீன்,
மூத்த பத்திரிகையாளர்.         

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா