அன்னையர் தினம்; கண்ணீர் வடிக்கும் கவிதை !

பத்து மாதம் சுமந்து பெற்றதும்
பாலூட்டுவதும் சீராட்டுவதும்
சாதாரணம் என எண்ணும்
பெருந்தன்மை !
பிள்ளைகளின் -
பசி பொறுக்காததும்
வலியறிந்து துடிப்பதும்
வளர்ந்த பின்னும்
குழந்தையாய் பாவித்து
பராமரிப்பதும்
தாயின் பாசம் !
தாயை மறப்பதுதான்
பிள்ளைகளின் பாசம் !
எட்டி உதைத்தாலும்
பாதம் பிடித்து
'' உன் கால் வலிக்கும்
செல்லமே...''
இன்று
உலக அன்னையர்  தினமாமே?
பெற்ற தாயைப் பட்டினி போட்டு
பெண்டாட்டியுடன் சேர்ந்து வசைபாடி
முதியோர்  இல்லம் சேர்க்கும்
முதிராத பிள்ளைகளை
மன்னிக்கும் பாசத் தாய்க்காக...
கண்ணீர் வடிக்கும்
கவிதை இது !
- மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா