நாட்டு வளர்ச்சியில் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் - மக்கள் பிரதிநிதிகளுக்கும் பொறுப்பு உள்ளது ! கொரோனா பாதித்த இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனையும் முக்கியம். ஆனால் மத்திய - மாநில அரசுகள் இதுவரை எதிர்க்கட்சிகளை அலட்சியப்படுத்தியே வந்திருக்கின்றன ! ஆனால் காங்கிரஸ், தி.மு.க. கம்யூனிஸ்ட், இ.யூ.முஸ்லிம் லீக், திரினாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. மத்திய பிஜேபி அரசோ மாநில அதிமுக அரசோ எதிர்க்கட்சிகளின் குரலை செவிமடுக்கவில்லை என புகார் கூறப்படுகிறது ! தமிழகத்தில் மே 31ம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில், தமிழக மருத்துவ கல்லூரிகளில் மத்திய தொகுப்புக்கு ஒப்படைக்கும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படக் கூடாது , கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 7500, 5000 ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகளுக்கு வலியுறுத...