கொரோனா- சித்த மருந்துகள் சோதனை செய்து பார்க்காதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி !

இந்திய மருத்துவத்திற்கு இந்தியாவிலேயே மதிப்பில்லை !
சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ முறைகள் அலோபதி -ஆங்கில மருந்துவத்தைவிட சிறந்தவை !
பக்கவிளைவுகள் இல்லாதவை. நீணடகால தீர்வு அளிக்கும் மூலிகைகள் சித்தா மருத்துவத்தின் மகத்துவமாகும்.
எல்லா வகை வைரஸ் காய்ச்சல் நோய்களுக்கும் சித்த மருந்துகள் உள்ளன. நிலவேம்பு கசாயம், கப சுர குடிநீர் போன்றவை இந்த கொரோனா காலத்தில் மிகவும் பயனுள்ள மருந்தாக தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த மருந்துகள் மார்ச் மாதத்திலேயே கொரோனா பாதித்தவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் கிருமி பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்!
சித்தா மருந்துகளை சோதனை செய்து பார்க்காததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மதுரை சித்த மருத்துவர்  டாக்டர் சுப்பிரமணியம் தாக்கல் செய்த வழக்கில், உயர்நீதிமன்ற  மதுரை கிளை நீதிபதிகள் , அலோபதி லாபியால் சித்த மருந்துகள் சோதனை செய்து பார்க்கப்படவில்லை என கண்டித்துள்ளனர்!
மருத்துவ காப்பீட்டிற்கு பல ஆயிரம் கோடி   ரூபாய் செலவழிக்கும்போது, இதுபோன்ற சித்த ஆயுர்வேத புதிய மருந்துகளை பரிசோதித்துப் பார்ப்பதில்  மத்திய - மாநில அரசுகளுக்கு தயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா