போலீஸ் விசாரணையில் தந்தை - மகன் பலியான வழக்கில் நீதி கேட்டு கடையடைப்பு !

சாத்தான்குளத்தில் தந்தை - மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் செல்பேசி கடை நடத்திவந்தனர். ஊரடங்கை மீறி இரவு 8 மணிக்கு மேல் கடையைத் திறந்து வியாபாரம் செய்ததாக காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு, போலீஸ் விசாரணையில் மரணம் அடைந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, உடல்நலக் குறைவால் அவர்கள் மரணம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது !
அவர்கள் இருவரும் காவல் நிலைய மாடியில் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும் அதனால் உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் அங்கு சென்ற உறவினர்கள், வணிகர்கள், கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் !
எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்து, கொலை வழக்கில் தண்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது !
இருவரது இறுதி அடக்கத்தில் கனிமொழி எம்.பி. உட்பட வணிகர் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி 26 ம் தேதி தமிழக முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா