மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு - மத்திய அரசு நிலைபாட்டுக்கு கண்டனம்!
மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் மருத்துவ படிப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றத்தில் திமுக, அதிமுக, மதிமுக கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு 27 சதவீத ஒதுக்கீடு வழங்க சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தி.க. தலைவர் வீரமணி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தமிழக நிலைபாட்டுக்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும் என தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வு வந்த பிறகு தமிழகத்தில் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கான மருத்துவ கல்வி வாய்ப்பு குறைந்துள்ளது. பட்டியலினம் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது !

Comments
Post a Comment