Posts

Showing posts from April, 2020

ஊரடங்கை நீடிப்பதற்கு முன் இவைதான் முக்கியம் !

ஊரடங்கால் மக்கள் சொல்லொணா துயரை அடைந்து வருகிறார்கள். 1. வேலை இல்லை, சம்பளமும் இல்லை ! 2. எல்லாரும் சேமிப்பு வைத்திருப்பதில்லை. விவசாய, கூலித் தொழிலாளர்களின் நிலை மிக மோசம் ! பலர் பட்டினி சாவை எதிர்நோக்கியுள்ளனர் ! 3. ஒரு முறை அரசு கொடுத்த ரூ.1000 மிக மிக குறைவாகும் ! அதுவும் பலருக்கு கிடைக்கவில்லை என புகார் ! 4. ஊரடங்கை தொடர்ந்தால் மக்கள் மேலும்  பல இன்னல்களுக்கு ஆளாவது நிச்சயம் ! எனவே அவர்களின் பசிப்பிணியைப் போக்கவும் குறைந்தது ரூ.5000 வழங்குவதும் மிக முக்கியம் ! 5. வைரஸ் பரவலை தடுப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அவர்களின் வாழ்வாதாரம் காப்பதும் மிக முக்கியம் ! - பல்வேறு தரப்பு மக்களின் கருத்து இவை !

நடிகர் ரிஷி கபூர் காலமானார் !

பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் ( 67 ) காலமானார் ! இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர் !

தொழில் நிறுவனங்களை ஈர்க்க குழு அமைப்பு !

வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு ! முதல்வர் பழனிசாமி உத்தரவு . ** கொரோனா பரவல் காரணமாக அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெளியேறும் பிரபல வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் தொடங்க இந்த குழு முயற்சி மேற்கொள்ளும் !

சென்னை - கடைகளில் மக்கள் கூட்டம் !

சென்னையில் முழு ஊரடங்கு நேற்று முடிந்ததால் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பல்வேறு கடைகளில் குவிந்தனர். கோயம்பேடு பேரங்காடியிலும் மக்கள் அதிகமாக குவிந்தனர் ! சென்னையின் பல இடங்களில் சமூக இடைவெளியை பேணினார்கள். சில இடங்களில் கூட்டமாக காணப்பட்டனர் !

ஊரடங்கு - அடுத்த நிலை என்ன ?- மு.க.ஸ்டாலின்

ஊரடங்கு மே 3 ம் தேதி முடிவதால் அடுத்த நிலை குறித்து மத்திய - மாநில அரசுகள் உடனே அறிவிக்க வேண்டும்  ! திடீர்  என அறிவித்தால் மக்கள் பதற்றம்  அடைவார்கள் ! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

முதல்வர் பழனிசாமி அறிவுரை !

ஊரடங்கு தளர்வுகளின் போது மக்கள் அவசரப்படாமல் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் ! - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

கரூர் - 95 வயது மூதாட்டி குணமடைந்தார் !

கரூர் - கொரோனா சிகிச்சை பெற்ற 95 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார் !

ராஜஸ்தானில் சிக்கிய தமிழக மாணவர்களை மீட்க ஏற்பாடு !

ராஜஸ்தான் கோட்டா மாவட்டத்தில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை தமிழகம் கொண்டுவர 3 பஸ்கள் ஏற்பாடு !

இந்தி நடிகர் இர்ஃபான் கான் மரணம் !

பிரபல இந்தி நடிகர் இர் ஃபான் கான் ( வயது 54 ) மும்பையில் காலமானார் ! ஆஸ்கார் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஹாலிவுட் படம் உள்பட பல படங்களில்  நடித்தவர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் ! இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஆகும். இவரது தாயார் சயீதா பேகம் நேற்றுமுன் தினம் ( 27ம் தேதி ) ஜெய்ப்பூரில் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

நிதி ஆயோக் அலுவலகத்தில் கொரோனா தொற்று !

டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பரபரப்பு !

ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமானது !

திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற  5 கொரோனா நோயாளிகள், தஞ்சாவூர் மருத்துவமனையிலிருந்து 9 பேர் குணமடைந்து வீடுதிரும்பினர் ! ** ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேர் நலம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமானது ! ** சிவகங்கை மருத்துவமனையில் இருந்து 10 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர் !

கோயம்பேடு பேரங்காடியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை ! !

சென்னை  கோயம்பேடு பேரங்காடியில்  மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமே அனுமதி !  பொதுமக்களுக்கு அனுமதி இல்லை !அங்கு 3 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போலீசார் நடவடிக்கை ! # பூ, பழ வியாபாரிகளுக்கு மாதவரத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதை வியாபாரிகள் ஏற்கவில்லை ! மாதவரம் சென்னையின் மையப் பகுதியில் இல்லாமல் வெகு தொலைவில் உள்ளது என வியாபாரிகள் புகார் கூறுகிறார்கள் !

அமெரிக்காவில் போராட்டம் !

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவின் 3 மாகாணங்களில் ஊரடங்கு தளர்வு ! ஊரடங்கை நீக்க வலியுறுத்தி பல நகரங்களில் மக்கள் போராட்டம் !

மனித நேய தீர்ப்பு - மு.க.ஸ்டாலின் பாராட்டு !

மத்திய - மாநில அரசுகள் வாங்கிய ரேபிட் டெஸ்ட் கிட் விலையில் முறைகேடு தொடர்பான வழக்கில் அதற்கு  விலை   ரூ.400 என டெல்லி உயர்நீதிமன்றம் நிர்ணயித்தது இந்த நேரத்தில் மனிதநேய தீர்ப்பு ! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு. ** விரைவு சோதனைக் கருவிகளை திருப்பி அனுப்புவதால் அரசுக்கு எந்த நஷ்டமும் இல்லை - சுகாதாரத் துறை.

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் ! இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா - மரணம் அடைந்தவர்களை அடக்கம் செய்வதை தடுத்தால் 3 ஆண்டு சிறை !

கொரோனா நோயால் மரணம் அடைந்தவர்களை தகனம் -அடக்கம் செய்வதை தடுத்தால் ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை  சிறைத் தண்டனை! - தமிழக அரசு அவசர சட்டம் !

சொத்துவரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு !

தமிழகத்தில் சொத்துவரி, குடிநீர் கட்டணம்  செலுத்த ஜூன் 30 வரை தேதி நீட்டிப்பு ! தமிழக அரசு உத்தரவு.

வடகொரிய அதிபர் கிம் நிலை என்ன ?

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சை செய்து உடல் நிலை கவலைக்கிடம் என முதலில் தகவல் வெளியானது. இப்போது அவர் மரணமடைந்துவிட்டார் என உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது !

கொரோனா பாதிப்பும் குணமடைந்தோர் எண்ணிக்கையும் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தபோதிலும்,  அதிக எண்ணிக்கையில் குணமடைந்துவருகின்றனர். சாவு எண்ணிக்கை சதவீதம் மிக குறைவாக உள்ளது ! விரைவில் கொரோனா தமிழகத்தில் இருந்து விடைபெறும் என்பதற்கு இது அறிகுறி என கூறப்படுகிறது. இன்றைய நிலவரம் - # இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26,000 பேர்;  மரணம்  826 பேர் . 5914 பேர் குணமடைந்துள்ளனர் ! # தமிழகத்தில் 1885 பேர் பாதிப்பு. குணமடைந்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது ! மரணம் 24 பேர் !

மு.க.ஸ்டாலின் மீது ஓ.பி.எஸ். குற்றச்சாட்டு !

கொரோனா காலத்தில், இல்லாத பிரச்சினைகளைக் கூறி திசை திருப்புகிறார் மு.க.ஸ்டாலின் ! துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு !

கொரோனா கால உதவிக்கு திமுக அறிவிப்பு !

கொரோனா பாதிப்பு காலத்தில் உதவி செய்வதற்காக ' ஒன்றிணைவோம் வா ' எனும் தலைப்பில் தொலைபேசி எண் ( 90730 90730  ) அறிவித்துள்ளது திமுக ! கொரோனா காலத்தில் பொதுமக்கள் தமது உதவிக்கான கோரிக்கைகளை சொல்வதற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசுவதற்கும் ஒரு வாய்ப்பு !

சென்னை, கோவை, மதுரையில் ஊரடங்கு தீவிரம் !

சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய  5 மாவட்டங்களில்  26ம் தேதி  முதல் முழு ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது !

கொரோனா - தமிழகத்தில் சிறப்பான பணி ! -மத்திய குழு பாராட்டு !

தமிழகத்தில் இன்று 96 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதாக மத்திய சுகாதார குழு பாராட்டு தெரிவித்துள்ளது ! - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி 

8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு !

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு  உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னதாக காஞ்சிபுரம், வேலூர், குடியாத்தம், ஆரணி முதலான இடங்களில் பலத்த மழை பெய்தது.

' கைப்புள்ள ' யாக மாறிய டிரம்ப் !

கொரோனா பரவலால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த வைரஸை தடுப்பதற்கு கிருமி நாசினியை ஊசி மூலம் உடலி ல் செலுத்தினால் என்ன ? என கூறி ' கைப்புள்ள '  போல மாட்டிக்கொண்டு முழிக்கிறார் ! இந்த கருத்துக்கு டாக்டர்கள், விஞ்ஞானிகள்,  தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், விளையாட்டாக கூறியதாக பல்டி அடித்துள்ளார் !

டெல்லி முதல்வருக்கு தமிழக முதல்வர் அவசர கடிதம் !

டெல்லி கொரோனா வார்டுகள் - மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 459 பேருக்கு உணவு - மருத்துவ வசதிகள் சரிவர கிடைக்க ஏற்பாடு செய்யும்படி டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் ! #  தப்லீக் மாநாட்டில் கலந்துகொண்ட இவர்களில் பலர் நீரிழிவு நோய் உள்ளவர்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ரமளான் நோன்பை முன்னிட்டு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை இணையதள பதிப்பாளர் கைது -மு.க.ஸ்டாலின் கண்டனம் !

கோவை இணையதள பதிப்பாளரை கைது செய்த தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் ! ஊரடங்கு நேரத்தில் ஊடகங்களை ஒடுக்க முயற்சி செய்யக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையை வெளியிட்டால் தண்டனையா என கேள்வி எழுப்பியுள்ளார் !

கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

டெல்லி ; கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார் ! கிராம மக்கள் சுயசார்புடன் செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா - அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது !

கொரோனா - அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது !

ஊரடங்கை நீட்டித்தால் பெரும் நாசம் விளையும்! -சோனியா

பிஜேபி ஆட்சியில் வெறுப்பு கொரோனா பரவிவருகிறது ! மே 3க்கு பிறகும் ஊரடங்கை நீட்டித்தால் பெரும் நாசம் விளையும் ! - சோனியா காந்தி கண்டன அறிக்கை 

கொரோனா தமிழகத்தில் 752 பேர் குணமடைந்தனர் !

தமிழகத்தில் இன்று வரை கொரோனா நோயிலிருந்து 752 பேர் குணமடைந்துள்ளார்கள் ! # 20 பேர் மரணம் ! # மொத்த பாதிப்பு 1683. *** '' விழித்திருப்போம், விலகியிருப்போம் ! வீட்டிலிருப்போம் ! கொரோனாவிலிருந்து நாட்டைக் காப்போம் ! '' - முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

கபசுர குடிநீர் பயன்படுத்த தமிழக அரசு உத்தரவு !

சென்னை;  ஆரோக்கிய திட்டம் என்ற பெயரில் நிலவேம்பு, கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. * முன்னதாக, மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ** கபசுர குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது! இதனை மத்திய அரசின் ஆயுஷ் துறை பரிந்துரை செய்துள்ளது.

மக்கள் சேவையில் 'உங்கள் செய்தி ' !

கொரோனா சிறப்பு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது உங்கள் செய்தி ! அரசின் அறிவிப்புகள் மட்டுமல்ல, மக்களின் குரலாக செய்திகள் வழங்கி வருகிறது ! உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்... - ஆசிரியர் , ' உங்கள் செய்தி '

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு !

கொரோனா - ஊரடங்கு காரணமாக பொது மக்களுக்கு அம்மா உணவகங்களில் இலவசமாக 3 வேளை உணவு வழங்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது!

வடகொரிய அதிபர் உடல்நிலை கவலைக்கிடம் !

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் உடல் நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது ! இவர் அணு ஆயுதங்களை சோதனை செய்து அமெரிக்காவை கடுமையாக எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது !

கொரோனாவால் மரணம் அடைந்த டாக்டர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் !

கொரோனா நோயால் மரணம் அடைந்த டாக்டர் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆறுதல் கூறினார் !

கொரோனா அச்சம் தவிர்ப்பீர் !

கொரோனா பற்றி அச்சுறுத்தும் வகையில் தகவல் வெளியிடாதீர் ! * கொரோனா அறிகுறியில்லாமல் பாதிக்கிறதாம் ! * அதற்கு மருந்தும் இல்லையாம் ! * இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் திணறுகிறார்கள். ஆனால் மருந்து இருக்கிறது! ** சித்தா, ஆயுர்வேத மருந்துகளை ஏன் அரசு புறக்கணிக்கிறது ? ' வேலைக்கு ஆகாத ' ரேபிட் கிட்களுக்கு வீண் செலவு ஏன் ? * ஆனாலும் கொரோனா விரைவில் ஒழியும் !  முதலில் கொரோனா பாதித்த சீன தேசம் மீண்டு வந்துள்ளதே இதற்கு சான்று ! ** ஊரடங்கால் மட்டும் கொரோனா ஒழியாது ! - உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே கொரோனா பெயரைச் சொல்லி மக்களை அச்சுறுத்தாதீர் !

அமெரிக்கா - ஊரடங்கை வாபஸ் பெற கோரி ஆர்ப்பாட்டம் !

அமெரிக்காவில் ஊரடங்கை வாபஸ் பெறக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர் ! ** நாங்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும், வேலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் !

தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை நிறுத்திவைப்பு !

சென்னை; தமிழகத்தில் விரைவு சோதனைக் கருவிகளால் பரிசோதனை செய்வது இன்று நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக,  ராஜஸ்தானில் கொரோனாவுக்கான விரைவு சோதனைக் கருவி ( ரேபிட் டெஸ்ட் கிட் ) சரியான முடிவுகளை தராததால், அதில் சோதனை செய்வதை நிறுத்த உத்தரவிட்டது மத்திய சுகாதாரத் துறை !

கொரோனா - இறந்தவர் உடல் மூலம் கிருமி பரவாது !

இறந்தவர்கள் உடலில் இருந்து கொரோனா பரவாது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர்களின் உடலை முறைப்படி பையில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது . அதனை எரித்தாலோ புதைத்தாலோ கொரோனா கிருமி பரவாது எனவும் அவர் கூறியுள்ளார் !

கொரோனாவால் மரணம் அடைந்தவர்களை அவமதிக்காதீர் !

சென்னை;  கொரோனா பாதிப்பில் மரணம் அடைந்த கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த நரம்பியல் டாக்டர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, அங்குள்ள பொதுமக்கள் தடுத்து தாக்குல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது ! இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது ! * மரணம் அடைந்தவர்களை கவுரவத்துடன் அனுப்பிவைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மனிதர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது கொடுமையாகும் !

வைரஸ் பரவலைத் தடுக்க பல இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது நல்லதுதான். அதேநேரம் மனிதர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பது காட்டுமிராண்டித்தனமாகும் ! பல இடங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இப்போது மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கக் கூடாது. அது உடலுக்கும் நல்லதல்ல, மனதுக்கும் உளைச்சல் தருவது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது !

ஜாதி - மதம் பார்த்து கொரோனா வருவதில்லை ! - பிரதமர் மோடி

ஜாதி, மதம், இனம், மொழி பார்த்து கொரோனா வருவதில்லை. எனவே ஒற்றுமையுடன் இந்த நோயை எதிர்த்துப் போராடுவோம் ! - பிரதமர் மோடி 

கர்நாடகா - ஊரடங்கில் தளர்வுகள் இல்லை !!

பிரதமர் மோடி வாக்களித்தபடி கர்நாடகாவில் 20ம் தேதி ஊரடங்கில் சில சலுகைகள் - தளர்வுகளை முதலில் அறிவித்த முதல்வர் எடியூரப்பா , பின்னர் அதனை வாபஸ் பெற்றார்!

கொரோனா - சென்னையில் 10 பேர் குணமடைந்தனர் !

ஒரே நாளில் தமிழகத்தில் 103 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்கள் ! ( நேற்று ) * இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்ற 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ** தமிழகத்தில் இதுவரை மொத்தம் 365 பேர் குணமடைந்துள்ளனர்!

கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது ! - முதல்வர் பழனிசாமி

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறது. படிப்படியாக கட்டுப்படுத்தப்படும். காய்கறிகள் விலை குறைவாகவே உள்ளது. - முதல்வர் பழனிசாமி பேட்டி 

திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் !

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி மூலம்  அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஈஸ்வரன் உட்பட தலைவர்கள் பங்கேற்றனர். கொரோனாவினால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய், ஏழைகளுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில் 32 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர் !

திருச்சி மருத்துவமனையில் இருந்து கொரோனா சிகிச்சை பெற்ற 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள் ! # கொரோனா நோய் மதம் பார்த்து வருவதில்லை. நோயைப் பார்த்து அஞ்சத் தேவையில்லை ! இது குணமாகக்கூடிய நோய்தான் என டிஸ்சார்ஜ் ஆன இஸ்லாமிய பெரியவர் நம்பிக்கையுடன் கூறினார் !

கொரோனா அச்சம் தவிர் , மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடாதீர் !

கோவிட் - 19 நோய் பரவாமல் தடுப்பதில் மத்திய - மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், ஊடகத்துறையினர் முதலானோர் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவருகின்றனர். இது பாராட்டுக்குரியது ! ஆனால் கொரோனா அச்சத்தால் பொதுமக்கள் சிலர் குறிப்பிட்ட நோயாளிகளை கேவலமாக நடத்துவதை காணமுடிகிறது. அதற்கு காரணம் கொரோனா குறித்து ஊடகங்களில் வரும் செய்திகள்தாம். # கொரோனா நோயாளிகள் இருக்கும் தெருக்களை பூட்டு போட்டு தடுப்பது. # மக்கள் வெளியில் வரமுடியாமல் போனதற்கு கொரோனா நோயாளிகள்தாம் காரணம் என தவறான பிரசாரம் அல்லது வதந்தி ! இதனால் கொரோனா பாதித்தவர்கள் மரணம் அடைந்தால், அவர்களை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகிறார்கள். அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ** கொரோனா குணப்படுத்த முடியாத நோயல்ல. பலர் குணமடைந்து வருவதே இதற்கு சான்று. இதுகுறித்தும் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும் ! ** விரைவில் கொரோனா நாட்டை விட்டே ஓடும் என நம்புவோம் !

உலக சுகாதார நிறுவனத்தை அவமதித்த அமெரிக்கா !

சீனாவுக்கு  ஆதரவாக செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தை குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நிறுவனத்திற்கு அளித்துவந்த நிதியை நிறுத்தி உத்தரவிட்டுள்ளார் ! இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன !

இந்தியாவுக்கு ஆயுத விற்பனை ! அமெரிக்கா தகவல்

இந்தியாவுக்கு ரூ.1178 கோடியில் ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு ! # கொரோனா உலகை அச்சுறுத்தும் வேளையில் ஆயுத வியாபாரம் குறித்த தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது !

சிவகங்கை - கொரோனா பாதிப்பிலிருந்து 6 பேர் குணமடைந்தனர் !

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்  ! ** தமிழக அளவில் 118 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது !

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 20 லட்சத்தை தாண்டியது !

மும்பையில் தொழிலாளர்கள் மீது தடியடி !

மும்பை பாந்த்ரா பகுதியில் ஆயிரக்கணக்கான வெளி மாநில கூலித் தொழிலாளர்கள் திடீரென கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது ! தங்களுக்கு உணவும் இல்லை, வேலையும் இல்லை என தெரிவித்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் கலைந்து சென்றனர் !

பிரதமரிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன ?

பிரதமர் மோடியிடம் மக்கள் எதிர்பார்ப்பது அறிவுரைகளை அல்ல; நிவாரண உதவிகளையே என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை !

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோடி

புதுடெல்லி;  நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு - மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்துள்ளார் . ஏப். 20 க்கு மேல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார் ! 7 அறிவுரைகளை வெளியிட்டுள்ள அவர்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வீடுகளில் முடங்கியுள்ள  பொதுமக்களுக்கு எந்த நிவாரண உதவியும் அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது ! முன்னதாக ஏப்ரல் 30 வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தன்னார்வ தொண்டர்களைத் தடுக்காதீர்கள் !

சாலைகளில் அல்லது வீடுகளில் அடைந்துகிடக்கும் ஏழைகளுக்கு அவர்களின் இடங்களுக்கே சென்று நிவாரண உதவிகளை - குறிப்பாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும். இதனை அரசு ஊழியர்களே முழுமையாக செய்ய முடியாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் தான் இதனைச் செய்ய முடியும். இதனை வைரஸ் பெயரைச் சொல்லித் தடுத்தால் மக்கள் பட்டினி கிடக்க வேண்டியதுதான் ! எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டர்கள் நிவாரண உதவிகள் வழங்குவதை அரசு எந்த வகையிலும் தடுக்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் !

கொரோனா சிகிச்சை - இங்கிலாந்து பிரதமர் குணமடைந்தார் !

லண்டன்; கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து இல்லம் திரும்பினார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் !

தமிழக மாவட்டங்கள் 3 வண்ணங்களாக பிரிப்பு !

தமிழகத்தில் கொரோனா அதிகமாக பாதித்த மாவட்டங்கள் சிவப்பு எனவும் நடுத்தரமாக பாதித்த மாவட்டங்கள் மஞ்சள் எனவும் மிக குறைவாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பச்சை எனவும் பிரிக்கப்பட்டுள்ளது. மஞ்சள், பச்சை  மாவட்டங்களில் சிறு -குறு தொழில்கள் நடத்தவும், பல கட்டுப்பாடுகள் நீக்கப்படவும்  வாய்ப்பு உள்ளது.

தமிழகத்திற்கு ரூ.1000 கோடி - முதல்வர் பழனிசாமி கோரிக்கை !

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ! - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் 

மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் ! - மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் ! ** எம்.எல்.ஏ.க்களின் தார்மீக உரிமைகளை மறுக்கும் வகையில் தொகுதி நிதியிலிருந்து ரூ.1 கோடி பிடித்தம் செய்தது கண்டனத்துக்குரியது ! - மு.க.ஸ்டாலின் அறிக்கை 

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க நிபுணர் குழு பரிந்துரை !

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது !

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் !

சென்னை; முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது !

பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் !

அத்தியாவசிய பொருட்கள்  வாங்க வாகனத்தில் செல்லும் பொதுமக்களை போலீசார்  கண்ணியத்துடன் நடத்த வேண்டும் ! - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு.

இங்கிலாந்து பிரதமர் உடல் நிலையில் முன்னேற்றம் !

லண்டன்;  அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது !

கவிதை - குரோத நோய் பரவுது !

இருமல் தும்மல் காய்ச்சல் இல்லாத மனிதர் யார் ? இந்த நோய்க்கு என்ன அறிகுறி என தெரியவில்லை மருந்தும் இல்லை ! இருந்தாலும் பரவிவிட்டது என பதற்றம் ! வல்லரசுகளையே ஆட்டிவைக்குது ! தீண்டாமையை சட்டமாக்கிவிட்டது... தொட்டால் பூ மலரும் - அன்று! தொட்டால் நோய் பரவும் - இன்று ! மக்களைத் தனியாகப்  பிரித்தாகிவிட்டது ! சிலரை விரட்டிப் பிடிக்கவும் ஏற்பாடு ! தொடர்புடையவரையும் பட்டியில் அடைத்துவிடலாம் ! வண்டியில் வெளிவந்தாலும் நடந்துவந்தாலும் பிரம்படிதான் ! ஊரடங்கை மீறாதே... பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை வீட்டிலேயே அடைந்துகிட ! இனிதான் சோதனை செய்வோம் ! நாங்கள் மறுபடி சொல்லும்வரை மக்கள் அல்ல நீங்கள் மாக்கள் !  - மீராப்பிரியன்

ஏழைகளுக்கு ரூ.10,000 வழங்க டி.ஆர்.பாலு வலியுறுத்தல் !

ஏழைகளுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவியாக ரூ.10,000 வழங்க வேண்டும். நடுத்தர மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் ! -பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் !

புதுடெல்லி; நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது ! # காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத்,  திமுக சார்பில் டி.ஆர்.பாலு, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் முதலானோர் பங்கேற்றனர் ! # கொரோனா தடுப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அவசர சட்டத்தின் மூலம் அவர்களின் தொகுதி நிதியிலிருந்து 30 சதவீதம் மத்திய அரசு பிடித்தம் செய்ததற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது !

அமெரிக்க மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது !

ஹைட்ரோ குளோரைடு குய்னைன் போன்ற மாத்திரைகளை இந்தியா வழங்க வேண்டும் என மிரட்டல் தொனியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்! # அவரது மிரட்டலுக்கு மத்திய பிஜேபி அரசு அடிபணியக் கூடாது என்று டி.ராஜா உள்ளிட்ட தமிழக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எம்.பி.க்களின் தொகுதி நிதியில் கை வைத்த மத்திய அரசு !

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி நிதியிலிருந்து ( கொரோனா தடுப்பு செலவுக்கு ) 30 சதவீதம் பிடித்தம் செய்ய மத்திய அரசு அவசர சட்டம்! மாநில உரிமைகளைப் பாதிப்பதாக வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் குற்றச்சாட்டு !

ஊரடங்கினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ! - கமல்ஹாசன்

முறையாக திட்டமிடப்படாத ஊரடங்கால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் ! - பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம்

மெழுகுவர்த்தி ஏற்றுவதால் கொரோனா ஒழியாது ! - நாராயணசாமி

இரவில் மெழுகுவர்த்தி ஏற்றுவதால் கொரோனா வைரஸ் அழிந்துவிடாது ! - புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டி 

அனைத்து கட்சி தலைவர்களுடன் மோடி திடீர் பேச்சு !

காங்கிரஸ் தலைவர் சோனியா        காந்தி, மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் பழ னிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.  கொரோனா தடுப்பு குறித்து நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் !

உலகில் 2.30 லட்சம் பேர் குணமடைந்தனர் !

கொரோனா பாதிப்பிலிருந்து -உலகம் முழுவதும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் குணமடைந்தனர் ! # உலக அளவில் 11 லட்சம் பேர் பாதிப்பு !

வீடுகளில் ஒளியேற்றுவோம் ! -பிரதமர் மோடி வேண்டுகோள்

நாளை (ஏப்.5 ம் தேதி)  மக்கள் இரவு 9 மணிக்கு 9 நொடிகள் கொரோனாவுக்கு எதிராக மெழுகுவர்த்தி, டார்ச் போன்ற விளக்குகளால் ஒளியேற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் ! ** மக்கள் வீட்டிலேயே இருந்து ஊரடங்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு  கொடுத்ததற்கு அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் !

ரேஷன் பொருட்கள் இம்மாத இறுதிவரை வழங்கப்படும் !

ரேஷன் கடைகளில் இம்மாத இறுதி வரை இலவச உணவுப் பொருட்கள், ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் ! - தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா கொடுமை - பொதுமக்கள் கோரிக்கை !

கொரோனா பரவலைத் தடுக்க சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிக்கிறார்கள். அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கிறார்கள். அவர்கள் சார்பாக வெளியே வரும் ஓரிருவரை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களையும் கொரோனா பாதித்தவர்களாக கருதி அன்போடு நடத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். வாகனங்களில் வருவோருக்கு அபராதம்  விதிப்பதும் பறிமுதல் செய்வதும் கொரோனா நோயை விட பெரிய துன்புறுத்தலாகும் என அவர்கள்  கூறுகிறார்கள்  ! 

ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கும் பணி தொடங்கியது !

தமிழகத்தில் அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களுடன் ரூ.1000 வழங்கும் பணி இன்று தொடங்கியது ! பெரும்பாலான ரேஷன் கடைகளில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டதாக தகவல் !

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அவரிடம் விளக்கினார். கொரோனா சோதனை உபகரணங்கள் வாங்க ரூ.9000 கோடி வழங்குமாறு  பிரதமர் மோடியிடம் கோரினார் !