கவிதை - குரோத நோய் பரவுது !
இருமல்
தும்மல்
காய்ச்சல்
இல்லாத மனிதர் யார் ?
இந்த நோய்க்கு
என்ன அறிகுறி
என தெரியவில்லை
மருந்தும் இல்லை !
இருந்தாலும் பரவிவிட்டது
என பதற்றம் !
வல்லரசுகளையே
ஆட்டிவைக்குது !
தீண்டாமையை
சட்டமாக்கிவிட்டது...
தொட்டால் பூ மலரும் - அன்று!
தொட்டால் நோய் பரவும் - இன்று !
மக்களைத் தனியாகப் பிரித்தாகிவிட்டது !
சிலரை விரட்டிப் பிடிக்கவும் ஏற்பாடு !
தொடர்புடையவரையும்
பட்டியில் அடைத்துவிடலாம் !
வண்டியில் வெளிவந்தாலும்
நடந்துவந்தாலும் பிரம்படிதான் !
ஊரடங்கை மீறாதே...
பட்டினி கிடந்தாலும்
பரவாயில்லை வீட்டிலேயே
அடைந்துகிட !
இனிதான் சோதனை செய்வோம் !
நாங்கள் மறுபடி சொல்லும்வரை
மக்கள் அல்ல நீங்கள்
மாக்கள் !
- மீராப்பிரியன்
தும்மல்
காய்ச்சல்
இல்லாத மனிதர் யார் ?
இந்த நோய்க்கு
என்ன அறிகுறி
என தெரியவில்லை
மருந்தும் இல்லை !
இருந்தாலும் பரவிவிட்டது
என பதற்றம் !
வல்லரசுகளையே
ஆட்டிவைக்குது !
தீண்டாமையை
சட்டமாக்கிவிட்டது...
தொட்டால் பூ மலரும் - அன்று!
தொட்டால் நோய் பரவும் - இன்று !
மக்களைத் தனியாகப் பிரித்தாகிவிட்டது !
சிலரை விரட்டிப் பிடிக்கவும் ஏற்பாடு !
தொடர்புடையவரையும்
பட்டியில் அடைத்துவிடலாம் !
வண்டியில் வெளிவந்தாலும்
நடந்துவந்தாலும் பிரம்படிதான் !
ஊரடங்கை மீறாதே...
பட்டினி கிடந்தாலும்
பரவாயில்லை வீட்டிலேயே
அடைந்துகிட !
இனிதான் சோதனை செய்வோம் !
நாங்கள் மறுபடி சொல்லும்வரை
மக்கள் அல்ல நீங்கள்
மாக்கள் !
- மீராப்பிரியன்
Comments
Post a Comment