Posts

Showing posts from December, 2019

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாைள இல்லை! இது நமது நம்பிக்கை ! 2020 புத்தாண்டு புலர்ந்தது... நல்லதைச் செய்வோம் அல்லதை விடுவோம் ! விடாமுயற்சியே வெற்றிக்கு வழி! அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! -ஜே.மீராமைதீன் , ஆசிரியர், ' உங்கள் செய்தி '.

தமிழகம் முழுவதும் கோலப் போராட்டம் !

சென்னை பெசன்ட் நகரில் தொடங்கிய கோலப் போராட்டத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக கோலப் போராட்டம் பரவிவருகிறது ! மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் கோலப் போராட்டத்துக்கு ஆதரவாக தமது வீட்டு வாசலில் கோலம் போட்டு போலீசார் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர் !

மதுரையில் மாபெரும் பேரணி !

மதுரையில் அனைத்து ஐக்கிய ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள், திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாபெரும் பேரணி - பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பேர் திரண்டிருந்தனர் !

காங்கிரஸ் சார்பில் மும்பையில் மாபெரும் பேரணி !

மும்பையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது !

மக்கள்தொகை கணக்கெடுப்பு - ப.சிதம்பரம் கருத்து !

இப்போது பிஜேபி அரசு எடுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2010ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுத்த கணக்கெடுப்புக்கு முற்றிலும் மாற்றமானது. எந்த நிபந்தனையும் இன்றி பழைய முறையே பின்பற்றப்பட வேண்டும் ! - டுவிட்டரில் ப.சிதம்பரம் , முன்னாள் மத்திய நிதியமைச்சர் 

மக்கள்தொகை கணக்கெடுப்பு -முதல்வர் பழனிசாமி விளக்கம் !

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010ல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இப்போது கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது சரியல்ல ! தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் எதுவும் இல்லை ! - முதல்வர் பழனிசாமி பேட்டி 

குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை ! -நவாஸ் கனி எம்.பி.

கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி தலைமையில் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் பேரா. கே.எம்.காதர் மொகிதீன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மாநில பொருளாளர் ஷாஜஹான் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். குடிநீர் பிரச்சினையை முழுமையாக தீர்க்க நடவடிக்கை எடுத்துவருவதாக நவாஸ் கனி எம்.பி. குறிப்பிட்டார் !

சூரியகிரஹனம் ; பொதுமக்கள் - மாணவர்கள் கண்டுகளித்தனர் !

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா முதலான மாநிலங்களில் சூரிய கிரஹனம் தெரிந்தது. பொதுமக்கள், மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர் ! ** காலை 8 மணி முதல் 11 மணி வரை நிலவு மறைத்த நெருப்புவளையமாகவும், சிவப்பு நிற தலைகீழ் பிறை போலவும் தோன்றி கொஞ்சம் கொஞ்சமாக கிரஹனம் நீங்கியது!

என்.ஆர்.சி. திட்டம் இப்போது இல்லை !- அமித்ஷா

தேசிய மக்கள் தொகை பதிவு மற்றும் சென்சஸ் கணக்கெடுக்கும் பணி ஏப்ரல்  மாதம் முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ** நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் எதுவும் இப்போது இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார் !

குடியுரிமை திருத்த சட்டமும் சென்னை பேரணியும் !

திமுக தலைமையில் மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி 23ம் தேதி நடைபெற்றது வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்து விட்டது ! அநீதி செய்யும் அரசனுக்கு எதிராக குரல் கொடுப்பவன்தான் உண்மையான வீரன் என்பது முதுமொழியாகும். அந்த வகையில் திமுகவின் முன்னெடுப்பு சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அமைதிப் போராட்டம் ஆகும். ** 3 அண்டை நாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ? ** அவசியம் எனில் முஸ்லிம்களை தவிர்த்தது ஏன் ? இலங்கை தமிழர்கள், மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு குடியுரிமை  - அகதி  அந்தஸ்துகூட மறுக்கப்படுவது ஏன் ?  ** குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை தவிர்த்து என குறிப்பிட்டுள்ளது இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது ! ** பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பது இந்தியாவின் பெருமையாகும் ! இது முற்றிலும் வாபஸ் பெற வேண்டிய சட்டம் !

முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை !- பிரதமர்

குடியுரிமை சட்டத்தால் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை ! எதிர்க்கட்சிகள் வீண் புரளிகிளப்பி வருகின்றன ! - டெல்லியில் பிரதமர் மோடி பேச்சு 

திமுக பேரணிக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !

நாளை ( திங்கள் ) திமுக தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது ! - மு.க.ஸ்டாலின் பேட்டி ** முன்னதாக,  இந்த பேரணிக்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது !

ஆட்டம் காணும் டிரம்ப் ஆட்சி !

சர்வாதிகாரப் போக்கில் செயல்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சி ஆட்டம் காண்கிறது ! ** அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியுள்ளது !

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை ?

குடியுரிமை சட்ட திருத்தத்தினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தமிழக அரசு பாதுகாக்கும். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க பிரதமர் மோடி, அமித்ஷாவிடம்  வலியுறுத்தினோம் ! - முதல்வர் பழனிசாமி அறிக்கை.

வன்முறையை தூண்டுவது யார் ?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது. ** போராட்டக்காரர்கள் பெயரில் சில தீய சக்திகள் வன்முறை -தீவைப்பு செயல்களில் ஈடுபவதாக குற்றச்சாட்டு ! ** உ.பி.யில் துப்பாக்கி சூடு அதிகம் நடக்கிறது. காரணம், அங்கு ஆட்சி செய்துவரும் பிஜேபி முதல்வர் யோகி ஆதித்யா மதவாதப் போக்கில் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன !

முஸ்லிம் அமைப்புகள் அமைதி போராட்டம் !

குடியுரிமை  திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன. ** முஸ்லிம் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மேலப்பாளையத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. வாணியம்பாடி, ஈரோடு, திண்டுக்கல் நகரங்களில் முஸ்லிம்கள்  அமைதி வழி போராட்டம் - ஊர்வலம் நடத்தினர் ! பலரும் தேசிய கொடிகளை ஏந்திச் சென்றது குறிப்பிடத்தக்கது. ** சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் இந்திய மாணவர் கூட்டணி  ( எஸ்.எப்.ஐ.) உட்பட கம்யூனிஸ்ட் அமைப்புகள் பங்கேற்றன. மாணவர்கள், மகளிர் திரளாக கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர் ! ** சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முஸ்லிம் அமைப்புகள் சார்பில்   நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஆயிரக்கணக்கான பேர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர் !

போலீசாருக்கு பூங்கொத்து கொடுத்த போராட்டக்காரர்கள் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. **  உ.பி. மாநிலத்தின் பல நகரங்களில்   போராட்டம் நடைபெற்றது. போலீசார் தடுத்து தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசியதால் கலவரம் ஏற்பட்டது ! **  டெல்லியில் ஜாமியா மஸ்ஜித் அருகே ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் போராட்டத்தில் பங்கேற்றனர் ! ** டெல்லி ஜாமியா மில்லியா மாணவ மாணவிகள் அமைதி ஊர்வலம் நடத்தி, போலீஸ் படையினருக்கு பூங்கொத்து கொடுத்து ஆச்சரியம் ஏற்படுத்தினர் !

டெல்லியில் முதல்வர் பழனிசாமி !

முதல்வர் பழனிசாமி டெல்லி சென்றார் ! பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார் !

முதல்வர் பழனிசாமி விளக்கம் !

சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு இல்லை என குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி பிரதமர் மோடியும் அமித்ஷாவும் விளக்கம் அளித்ததால் தான் ஆதரவு அளித்தோம் ! - முதல்வர் பழனிசாமி பேட்டி 

தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் !

திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில்  குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ! ** காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்     இந்த சட்டத்தால் முஸ்லிம்களும் இலங்கை தமிழ் அகதிகளும் பாதிக்கப்படுவதாகவும் அதிமுக ஆதரித்து வாக்களித்த காரணத்தால் தான் இந்த சட்டம் நிறைவேறியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார் !

தஞ்சை, திருவாரூர் மாணவர்கள் போராட்டம் !

தஞ்சை பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது ! ** டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் !

ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது தாக்குதல் !- நடந்தது என்ன ?

புதுடெல்லி; குடியுரிமை மசோதா எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மில்லியா பல்கலை. மாணவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதல் ! எதிர்க்கட்சிகள் கண்டனம் ! ** பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து நூலகத்தில் இருந்த மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர் ! ** வாகனங்களை போலீசாரே தீயிட்டு கொளுத்தியதாக ரவிக்குமார் எம்.பி. (வி.சி.க. ) குற்றம் சாட்டியுள்ளார். ** வன்முறை தொடர்பாக 10 ரவுடிகள் கைது !

மம்தா பானர்ஜி தலைமையில் மாபெரும் பேரணி !

மத்திய  பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு !

நாட்டில் வன்முறை-  போராட்டங்களை தூண்டிவருகிறது காங்கிரஸ் ! -பிரதமர் மோடி குற்றச்சாட்டு !

மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசியல் சாசனத்துக்கு விரோதமானது ! இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது. பொருளாதார மந்த நிலை போன்ற பிரச்சினைகளை  மத்திய பிஜேபி அரசு இதுபோன்ற தேவையற்ற சட்டங்களால் திசை திருப்பிவருகிறது ! - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 

பிரசாரத்தின்போது தடுக்கிவிழுந்த பிரதமர் மோடி !

உ.பி. யில் பிரசாரம் செய்யச் சென்ற பிரதமர் மோடி படிக்கட்டில் ஏறிச்சென்றபோது தடுக்கிவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! இந்த காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது !

நோ சூடு -நோ சொரணை !- நித்தியானந்தா

சூடு -சொரணை எதுவும் எனக்கு இல்லை ! என்னை விமர்சனம் செய்பவர்கள் பற்றி கவலை இல்லை !  மீம்ஸ் போடும் மாம்ஸ்களால் எனது கைலாசா  ( தனி தீவு ) புகழ் பரவி வருகிறது !  - கடத்தல், பாலியல் வழக்கில் வெளிநாடு தப்பி ஓடிய நித்தியானந்தா வெளியிட்ட ஆன்லைன் வீடியோவில் அடேங்கப்பா கருத்து !

புதுவை - மோடி உருவ பொம்மை எரிப்பு -கைது !

புதுவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பெரியார் தி.க. சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மசோதா பிரதி எரிக்கப்பட்டது. மேலும் மோடி, அமித்ஷா உருவபொம்மைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிக்க முற்பட்டபோது, போலீசார் தடுத்து கைது செய்தனர்.

சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு ?

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைய போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட முடியாது ! - உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

ரேப் இன் இந்தியா -ராகுல்காந்தி பேச்சுக்கு பிஜேபி கண்டனம் !

மேக் இன் இந்தியா என்று கூறும் பிரதமர் மோடியின் ஆட்சியில் ரேப் இன் இந்தியா என்று கூறும் அளவுக்கு நாட்டில் கற்பழிப்புகள் அதிகரித்து வருகிறது! - ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் ராகுல்காந்தி பேச்சு . பிஜேபி கண்டனம் !

தமிழகத்தில் பரவலாக மழை !

மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் ! -வானிலை அறிக்கை ** இன்று சென்னை தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முதலான பகுதிகளிலும் பரவலாக மழை !

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசி அசத்திய ஆ.ராசா, திருமாவளவன் !

நாடாளுமன்றத்தில் ஆ.ராசா, திருமாவளவன் இருவரும் தமிழ் மொழியில் பேசி அசத்தினர் ! ** மத்திய பிஜேபி அரசு, 3 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைக்க எதிர்ப்பு !  ** சமஸ்கிருத மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை ! சமஸ்கிருதத்திற்கு முன்பே செம்மொழி அந்தஸ்து பெற்றது தமிழ் !

குடியுரிமை சட்டம் கண்டித்து மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் !

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து அஸ்ஸாமில் போராட்டம் வலுக்கிறது ! ** அஸ்ஸாம் மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் ! - பிரதமர் மோடி உறுதி ** சென்னையில் குடியுரிமை மசோதாவை எதிர்த்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேல்முருகன், தமீமுல் அன்சாரி, கருணாஸ், தனியரசு முதலானோர் பங்கேற்றனர்.

கடும் எதிர்ப்புக்கிடையே குடியுரிமை மசோதா நிறைவேறியது !

மதபாகுபாடு உடையது என பலத்த எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது ! * முன்னதாக திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரினாமுல் காங்கிரஸ் முதலான கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ! * அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு !

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு !

பாபரி மஸ்ஜித் - அயோத்தி நிலஉரிமை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது! வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது !

அமெரிக்காவில் நுழைய தடை ?

பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருவதற்கு அமெரிக்காவில் உள்ள மதசுதந்திரத்திற்கான ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது ! இரு அவைகளிலும் இந்த மதபாகுபாடு கொண்ட சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமித்ஷா உள்பட இந்திய உயர்பதவி தலைவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என அறிக்கை அளித்துள்ளது.

மதபாகுபாட்டுடன் சட்டம் -கடும் கண்டனம் !

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் முதலான இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும்  ' குடியுரிமை சட்ட திருத்த மசோதா ' மக்களவையில் எதிர்ப்புகளுக்கு இடையே பிஜேபி அரசு நிறைவேற்றியது! * இந்தியாவில் மதபாகுபாட்டுடன் சட்டம் கொண்டுவருவதாக உலக அளவில் கடும் கண்டனம் !

உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு !

உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மறுஅறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு எதிராக   திமுக உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்துள்ளது ! மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேறியது ! * மக்கள் ஆதரவு எங்கள் பக்கம் ! -மு.க.ஸ்டாலின் 

திமுக மீது முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு !

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க.வுக்கு தைரியம் இல்லை ! - முதல்வர் பழனிசாமி பேட்டி

காரைக்குடியில் அரசு பஸ் மோதி முதியவர் பலி !

காரைக்குடி ; புதிய பேருந்து நிலையத்தில் அரசு பஸ் மோதி முதியவர் பலி ! ( வலை தளங்களில் வீடியோ பரவி வருகிறது )

றெக்கை கட்டி பறக்கும் வெங்காய விலை!

சென்னை ; தங்கம் போல் உயர்கிறது வெங்காய விலை ! இப்போது பெரிய  வெங்காய விலை ரூ. 200ஐ எட்டியது !  ** விலையைக் குறைக்க மத்திய - மாநில  அரசுகளுக்கு  கோரிக்கை  !

நயன்தாரா அறிவுரை !

பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர் சொல்லிக் கொடுக்க வேண்டும் ! - நடிகை நயன்தாரா அறிக்கை 

மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் !

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரிப்பு - தடுக்கத் தவறிய மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் !  - செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா பேட்டி 

டெல்லி தீவிபத்து - 43 பேர் பலி !

டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து - 43 பேர் பலி ! ** பிரபல ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி  மார்க்கெட்டில் இந்த பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. ** பிரதமர் மோடி இது கொடூரமான தீவிபத்து என இரங்கல் தெரிவித்துள்ளார்.

வரும் 27, 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் !

சென்னை;  வரும் 27, 30 தேதிகளில் 9 புதிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜன.2 -ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து முன்னதாக பழைய அறிவிப்பை ரத்து செய்திருந்தது. *** இந்த அறிவிப்பு நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என திமுக கண்டனம் ! மேல்முறையீடு செய்ய முடிவு !

என்கவுண்டருக்கு எதிராக மனித உரிமை ஆணையம் வழக்கு !

தேசிய மனித உரிமை ஆணையம், தெலுங்கானாவில் பாலியல் குற்ற வழக்கில் 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது !

உள்ளாட்சி தேர்தல் தாமதமாகுமா ?

புதிய மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தபோதும், சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் தேர்தல் இன்னும் தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது !

தெலுங்கானாவில் என்கவுண்டரில் 4 பேர் சுட்டுக்கொலை !

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை ! ** பலர் பாராட்டு ! நீதிமன்ற விசாரணைக்கு பிறகு தண்டனை வழங்காமல் போலீசார் சுட்டுக் கொன்றது சட்டவிரோதம் என்றும் குற்றச்சாட்டு !

மாணவர்களின் மனநலம் -பிரதமர் அறிவிப்பு !

பரீட்சை நேரத்தில் மாணவர்களின் அச்சம் போக்கும் வகையில் விரைவில் மனநல ஆலோசனை அளிக்கும் திட்டம் ! பிரதமர் மோடி அறிவிப்பு 

திறமையற்ற நிதியமைச்சர் ! ராகுல்காந்தி தாக்கு !

திறமையற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ! வெங்காய விலையேற்றம் பற்றி கேட்டால் நான் வெங்காயம் சாப்பிடுவது இல்லை என பதில் கூறுகிறார்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு !

அரசகுமார் திமுகவில் இணைந்தார்!

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழக பிஜேபி துணை தலைவர் அரசகுமார்  திமுகவில் இணைந்தார்!

நித்தியானந்தாவின் கைலாசா தீவு ?!

வசியம், பாலியல் கொடுமை வழக்கில் சிக்கிய நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடி ஒரு தீவையே விலைக்கு வாங்கி கைலாசா நாடு என பெயரிட்டு அதற்கு  விசா பெற விண்ணப்பிக்குமாறு ஆன்லைனில் அறிவிப்பு ! ** மோசடிகளையும் தில்லுமுல்லுகளையும்  உலகம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது !

ஜெயலலிதா 3வது ஆண்டு நினைவு அஞ்சலி !

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில்  பேரணி நடைபெற்று மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர் !

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது !

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு; அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் ! உச்சநீதிமன்றம் உத்தரவு ! ** 102 நாட்களுக்கு பிறகு திஹார் சிறையில் இருந்து விடுதலையாகிறார் !

மீண்டும் காங்கிரஸ் தலைவர் ஆகிறார் ராகுல்காந்தி !

பிஜேபி பல மாநிலங்களில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் !

நித்தியானந்தா தனி நாடு உருவாக்க திட்டம் !

மதத்தின் பெயரைச் சொல்லி பல லட்சம்  டாலர்களைச் சுருட்டி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார் நித்தியானந்தா ! குஜராத் போலீசால் தேடப்படும் குற்றவாளியான அவர் தனித் தீவையே விலைக்கு வாங்கி தனி நாடு அமைக்கவும் திட்டம் !

நித்தியானந்தா ஆசிரமம் சீல்வைப்பு !

குஜராத்தில் நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீஸ் சோதனை நடத்தி சீல்வைக்கப்பட்டது !

முதல்வர் பழனிசாமி உறுதி !

மேட்டுப்பாளையம்; சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் பலி ! விபத்துக்கு காரணமான  வீட்டு உரிமையாளர் மீது தக்க நடவடிக்கை ! முதல்வர் பழனிசாமி உறுதி !