குடியுரிமை திருத்த சட்டமும் சென்னை பேரணியும் !

திமுக தலைமையில் மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி 23ம் தேதி நடைபெற்றது வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்து விட்டது !
அநீதி செய்யும் அரசனுக்கு எதிராக குரல் கொடுப்பவன்தான் உண்மையான வீரன் என்பது முதுமொழியாகும்.
அந்த வகையில் திமுகவின் முன்னெடுப்பு சர்வாதிகாரப் போக்கிற்கு எதிரான அமைதிப் போராட்டம் ஆகும்.
** 3 அண்டை நாடுகளைச் சேர்ந்த குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ?
** அவசியம் எனில் முஸ்லிம்களை தவிர்த்தது ஏன் ? இலங்கை தமிழர்கள், மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் போன்றவர்களுக்கு குடியுரிமை  - அகதி  அந்தஸ்துகூட மறுக்கப்படுவது ஏன் ?
 ** குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை தவிர்த்து என குறிப்பிட்டுள்ளது இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது !
** பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் என்பது இந்தியாவின் பெருமையாகும் ! இது முற்றிலும் வாபஸ் பெற வேண்டிய சட்டம் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா