சென்னை ; அண்ணா அறிவாலயத்தில் குடியுரிமை திருத்த சட்டம் உட்பட பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்க திமுக தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது! ** திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ராமசாமி எம்.எல்.ஏ., கம்யூனிஸ்ட் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேரா. கே.எம்.காதர் மொகிதீன், முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க.தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர் !