Posts

Showing posts from March, 2020

டெல்லி - கூலித் தொழிலாளர்களின் அவல நிலை !

டெல்லியில் கொரோனா பீதியில் ஆயிரக்கணக்கான உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பேருந்து நிலையத்தில் கூட்டமாக கூடியதால் பதற்றம் ஏற்பட்டது. எல்லா மாநிலத்தவரும் டெல்லியிலேயே தங்கலாம் என முதல்வர் கேஜ்ரிவால் கூறியபோதும், மற்ற மாநிலத்தவரை சொந்த ஊருக்கு அனுப்பலாம் என மத்திய அரசு உத்தரவிட்டதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது! #அவர்கள் சொந்த மாநிலம் செல்ல டெல்லி அரசு வாகன ஏற்பாடும் செய்யவில்லை. #அவர்களின் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது !

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படாது ! - மத்திய அரசு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு நீட்டிப்பு இல்லை ! - மத்திய அரசு அறிவிப்பு 

சமூக விலகலில் அலட்சியம் வேண்டாம் !

தமிழகத்தில் பல இடங்களில் சந்தை, கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது ! பொது இடங்களில் மக்கள் தேவையில்லாமல் நடமாடினால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் ! - தமிழக அரசு எச்சரிக்கை 

இந்தியா - கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியது !

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது! //தமிழகத்தில் 50 பேருக்கு பாதிப்பு. ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு ! ( ஈரோடு ) ** 2 பேர் குணமடைந்தனர் !

பேரிடர் நிவாரண நிதி - பிரதமர் மோடி வரவேற்பு !

பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு பொதுமக்கள், தொழிலதிபர்கள்  உட்பட அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு - 41 பேராக உயர்வு !

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 41 பேர் ஆக உயர்வு !

ஏழைகளுக்கு கூடுதல் அரிசி - பருப்பு ! -நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு - நிவாரண திட்டங்களுக்கு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு ! ஏழைகளுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை,  1கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் மத்திய அரசு வழங்கும் ! ** விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2000, முதியவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி.

21 நாட்களுக்கு ஊரடங்கு ! - பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு - மேலும் 21 நாட்கள் ஊரடங்கு ! பிரதமர் மோடி அறிவிப்பு.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு !

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை தமிழக முழுவதும் 144 தடை உத்தரவு ! மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் ! முழு ஒத்துழைப்பு தர முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் !

கொரோனா பாதிப்பு - இலவச உணவுப் பொருட்களுடன் ரூ.1000 ! தமிழக அரசு உத்தரவு

கொரானா பாதிப்பு  நிவாரணமாக அரிசி மட்டுமின்றி சர்க்கரை முதலான   ரேஷன் பொருட்கள் இவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு ! ** ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கவும் உத்தரவு !

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணி தீவிரம் !

கொரோனா பாதிப்பு -தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஊரடங்கு தொடர்கிறது! வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் ! ** அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும் தமிழக அரசு உத்தரவு  ! ** அரசு உத்தரவுப்படி,  திருப்பூர் பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டன. பணியாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்!

கொரோனா பாதிப்பு - ரூ.1000 நிவாரண உதவி ! ஆந்திர மாநில அரசு உத்தரவு

ஆந்திராவில் கொரோனா தடுப்பது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை - நடுத்தர மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.1000 மற்றும் இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு !

இயக்குநர் - நடிகர் விசு காலமானார் !

இயக்குநர் - தயாரிப்பாளர் - நடிகர் விசு காலமானார் ! சம்சாரம் அது மின்சாரம் என்ற மக்கள் பாராட்டும் சிறந்த குடும்ப திரைப்படத்தை இயக்கியவர்.

நாட்டின் முக்கிய நகரங்களில் கடைவீதிகள், சாலைகள் வெறிச்சோடின !

பிரதமரின் வேண்டுகோள் படி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்களின் சுய ஊரடங்கு அமைதியாக அனுசரிக்கப்பட்டது ! கடைவீதிகள், சாலைகள், மால்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. டெல்லி, கொல்கத்தா, பாட்னா, அலஹாபாத், ஹரியானா, பெங்களூர், ஹைதராபாத்  முதலான நகரங்களில் முழு அடைப்பு - சாலைகள் வெறிச்சோடி இருந்தன ! #சென்னையில் அண்ணாசாலை, மெரினா கடற்கரை, நுங்கம்பாக்கம், வடபழனி, போரூர், கிண்டி முதலான பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி இருந்தன. பேருந்துகள், ரயில்கள் இயங்கவில்லை ! ** கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னலமின்றி செயல்படும்  மருத்துவர், செவிலியர், காவல்துறையினர், வருவாய்த் துறை,  உள்ளாட்சித் துறையினர், ஊடகத்துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாலை 5 மணிக்கு மக்கள் கைதட்டினர். தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர் !

பிரதமர் மோடி வேண்டுகோள் !

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக,  நாளை சுய ஊரடங்கு அனுசரிக்க வேண்டும். வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் ! அஞ்சத் தேவையில்லை ! - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.

கொரோனா அச்சம் இல்லை - காரைக்குடியில் இயல்பு நிலை !

காரைக்குடியில் கடந்த சில தினங்களில் கொரோனா அச்சம் காணப்படவில்லை. அம்மன் சன்னதி தெரு, செக்காலை சாலை, மார்க்கெட் பழைய- புதிய பேருந்து நிலையங்கள் உள்பட முக்கிய பகுதிகளில் மக்கள் இயல்பு நிலையில் காணப்பட்டனர். பெரிய ஜவுளிக்கடைகள், ஸ்டோர்கள் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகள், தேநீர் கடைகள், மளிகை கடைகள், சிறு சிறு கடைகள், பழக்கடைகள் திறந்திருந்தன ! ( 21ம் தேதி பதிவு )

செய்தித் துளிகள் !

நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேறியது - பலரும் வரவேற்பு ! ** விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பெண்கள், ஒரு ஆண் பலி !

தமிழகத்தில் 22ம் தேதி அரசு பேருந்துகள் இயங்காது !

பிரதமர் மோடி  கொரோனா தடுப்பு குறித்த பேச்சில், 22ம் தேதி மக்களின் சுய ஊரடங்கு பற்றி அறிவித்தபடி அதற்கு ஆதரவாக தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயங்காது ! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

கொரோனா பாதிப்பு -கேரள மக்களுக்கு நிவாரண உதவி !

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல சலுகைகள் - நிவாரண உதவிகளுக்கு ரூ.20,000 கோடி  ஒதுக்கீடு ! ஏழை மக்களுக்கு ரூ. 1000 ! கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு.

மார்ச் 22 ல் சுய ஊரடங்கு - பிரதமர் மோடி பேச்சு !

கொரோனா வைரஸ் தடுப்பு - மக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் !    மக்கள் மார்ச் 22ல் காலை முதல் இரவு வரை சுய ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும்.  - பிரதமர் மோடி அறிவிப்பு !

கோவிட் - 19 பரவாமல் தடுப்பது எப்படி ?

சோப்பினால் கைகளை நன்கு கழுவுங்கள் ! ** தும்மினால் மூக்கு, வாயை துணியால் மூடிக்கொள்ளவும் ! முக கவசம் அணிந்து கொள்வது சிறந்தது ! ** தொற்றுநோய் பரவாமல் தடுப்போம் - சுகாதாரம் காப்போம் ! - பொதுநலம் கருதி வெளியிடுவோர்... உங்கள் செய்தி !

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு !

அமெரிக்காவில் கொரோனா வைரஸுக்கு மருந்து சோதனை செய்து பார்க்கப்படுகிறது ! ** சீனாவில் கொரோனா -வுக்கு மருந்து தயார் - சோதனை செய்துபார்க்க அனுமதி !

கொரோனா தடுப்பு - ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் கோரிக்கை !

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள் பாதிப்பு ! அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதனால் எங்கள் பிழைப்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினர்!

நோய் எதுவானாலும் இறைவன் சோதனையே !

பெரியம்மை, எய்ட்ஸ், டைபாய்டு, சிக்கன்  குனியா, பறவைக்காய்ச்சல், கொரோனா வைரஸ்... நோய் எதுவானாலும் இறைவன் சோதனையே ! எல்லா நோய்க்கும் மருந்து உள்ளது, கண்டுபிடிக்க வேண்டியது மனிதனின் கடமை என்பது ஆன்மிகவாதிகள் கருத்து ! - ஜே.மீராமைதீன் 

பரவும் கொரோனா டென்ஷன் !

தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்காமல் இருந்தாலே கொரோனா டென்ஷன் குறையும் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள் !

தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு !

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பாராட்டு !

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் தள்ளிவைப்பு !

கொரோனா தடுப்பு- சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் தள்ளிவைக்க முஸ்லிம் அமைப்புகள் வேண்டுகோள் !

தவறான பிரசாரம் - பேரா. காதர்மைதீன் பேட்டி !

சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்பது தவறான  பிரசாரம் ! - கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேரா. கே.எம். காதர் மைதீன் பேட்டி.

கொரோனா தடுப்புக்கு ரூ.60 கோடி ! - தமிழக அரசு

கொரோனா நோய் தடுப்புக்கு ரூ.60 கோடி ஒதுக்கீடு ! * 5ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை ! - தமிழக அரசு உத்தரவு .

ஸ்பெயின் பிரதமர் மனைவிக்கு வைரஸ் தொற்று !

ஸ்பெயின் பிரதமர் மனைவி பெகோனா கோமஸுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதாக தகவல் !

ரசனை மொழி !

கோவிட் வைரஸ் உலகையே அச்சுறுத்துகிறது... ஆனால் மோடியை மட்டும் காப்பாற்றிவிட்டது ! - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

கோவிட் பாதிப்பு - இந்தியாவில் 2 பேர் பலி !

கோவிட் வைரஸ் - டெல்லியில் 69 வயது முதிய பெண் பலியானார். முன்னதாக கொரோனா வைரஸ் காரணமாக, கர்நாடகாவில்  76 வயது முதியவர் முஹம்மது ஹுசைன் சித்தீகி மரணம் அடைந்தார். இவர் சவூதி சென்று உம்ரா செய்து திரும்பியதாக தகவல் !

மக்கள் எழுச்சி - நடிகர் ரஜினிகாந்த் எதிர்பார்ப்பு !

மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே நான் முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் ! - சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த  பேட்டியில்  நடிகர் ரஜினிகாந்த் உணர்ச்சிபூர்வ பேச்சு. ** '' இரண்டு பெரும் அரசியல் ஜாம்பவான்களை ( திமுக, அதிமுகவை  ) எதிர்த்து போராட வேண்டியுள்ளது.''

பெட்ரோல் விலை - மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கேள்வி !

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் மத்திய பிஜேபி அரசு பெட்ரோல் விலையை குறைக்காமல் இருப்பது ஏன் ? - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி 

பிஜேபி தமிழக புதிய தலைவர் நியமனம்!

தமிழக பிஜேபி தலைவராக எல்.முருகன் நியமனம் ! தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு 

சட்டமன்ற செய்தி; என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம் இல்லை !

என்.ஆர்.சி., சிஏஏவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது ! அமைச்சர் உதயகுமார் மறுப்பு . மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வெளிநடப்பு !

கொரோனா பாதித்த நபர் குணமடைந்தார் !

கொரோனா பாதித்த காஞ்சிபுரம் நபர் குணமடைந்தார் ! அமைச்சர் விஜயபாஸ்கர் மகிழ்ச்சி தகவல்.

சேலத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரம் !

சேலத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தீவிரம்; பாய், தலையணையுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  முற்றுகை !

ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து !

ம.பி.யில் ஜோதிராதித்ய சிந்தியா உட்பட  22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ! கமல்நாத் தலைமையில் அமைந்த காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ! # சிந்தியா பிஜேபிக்கு தாவுகிறார் !

குரோனா வைரஸ் தடுப்பது எப்படி ?

உலக நாடுகளைப் பதறவைக்கும் குரோனா வைரஸ் ! மருந்து இல்லை, சுத்தம் மட்டுமே பாதுகாப்பு ! ** கைகளை தண்ணீரால் சோப்பு போட்டு பலமுறை கழுவுங்கள் ! ** தும்மல், இருமல், சளி, மூச்சுத் திணறல் இருந்தால்,  மருத்துவமனைகளை அணுகவும். - பொதுநலம் கருதி வெளியிடுவது, உங்கள் செய்தி !

இந்தியாவுக்கு மும்முனை ஆபத்து ! - மன்மோகன் சிங் எச்சரிக்கை

திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சமூக பதற்றம், மோசமான பொருளாதார நிர்வாகம், தொற்றுநோய் ஆகிய மும்முனை ஆபத்துகளை இந்தியா சந்தித்துவருகிறது! பிரதமர் மோடி, வெறும் வார்த்தைகளால் அல்ல, செயலால் நாட்டு மக்களிடம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும் ! - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை.

கொேரானா - பீதி அடையத் தேவையில்லை ! -விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் குறித்து பீதி அடையத் தேவையில்லை ! தமிழகத்தில் பாதிப்பு இல்லை ! - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி 

பேராசிரியர் அன்பழகன் மறைவு - தலைவர்கள் இரங்கல் !

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவு - தமிழக தலைவர்கள் அஞ்சலி ! **  திராவிட சிகரம் சரிந்துவிட்டது !-அரசியல் ஆசான் - பெரியப்பா மறைவு குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கமான இரங்கல் அறிக்கை - நேரில் கண்ணீர் அஞ்சலி ! ** முதல்வர் பழனிசாமி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் ! ** துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி !

ராமனாதபுரத்தில் அரசு புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா !

ராமனாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. அங்கு பட்டணம்காத்தான் பூங்கா அருகில் 22.6 ஏக்கர் நிலத்தில் ரூ.325 கோடி செலவில் அமைகிறது. 6 அடுக்குகளுடன் 750 படுக்கைகள் மற்றும் பல்வேறு நவீன மருத்துவ வசதிகளுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உருவாகிறது. மார்ச் 1-ல் முதல்வர் பழனிசாமி, துணை  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினர்.   விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

சிஏஏ சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை ! -அமித்ஷா

சிஏஏ சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் ஒருவர்கூட பாதிக்கப்பட மாட்டார்கள் ! -  அமித்ஷா உறுதி 

நாடாளுமன்றத்தில் தர்ணா !

டெல்லி கலவரம் - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி ! ** டெல்லியில் நடந்த கலவரத்தை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவிவிலக கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா !