Posts

Showing posts from February, 2019

இந்தியா - பாகிஸ்தான் போர் மூளும் அபாயம் !

இந்தியா தனது விமானப்படை மூலம் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தி, 350 தீவிரவாதிகளை அழித்து விட்டதாக அறிவித்தது! புல்வாமா தாக்குதலுககு பழி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் - இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸதானிடம் சிக்கிவிட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், இந்திய வீரரை விடுதலை செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது ! பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில் இந்திய வீரரை பாகிஸ்தான் அதிகாரி அன்போடு நடத்தியது தெரியவந்தது ! மேலும் சமாதான அடிப்படையில் இந்திய வீரரை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிததுள்ளார் ! இதனை ஏற்று பிரதமர் மோடி சமாதான ம் பேச முன் வருவாரா ?

தேர்தல் நேரத்தில் இலவச திட்டங்கள் அமல் !

பலரும் சொல்வது மக்களுக்கு இலவசம் கொடுப்பதை விடவேலை வாய்ப்பை உருவாக்குவது தான் சிறந்தது என்று ! ஆனால் அரசியல் கட்சிகள் தமது ஆட்சியில் இலவச திட்டங்களை செயல்படுத்த வேகம் காட்டி வருகிறார்கள்! பொங்கல் பண்டிகைக்கு அதிமுக அரசு ரூ 1000 வழங்கியது! விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறிய மோடி அரசு ரூ 6000 விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறி ஒரே நேரத்தில் ரூ 2000 வீதம் முதல் தவணையாக 1 கோடி பேருக்கு வங்கி கணக்கில் சேரும் வண்ணம் பட்டனை அழுத்தி தொடங்கி வைத்துள்ளார்! தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ 2000 வழங்க கணக்கெடுப்பு நடத்துகின்றது ! தேர்தல் நெருக்கத்தில் இவ்வாறு கொடுப்பது வாக்குப் போட பணம் கொடுப்பது போலத் தானே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்!

தனி மரமாக நிற்கும் கமலஹாசன்!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் அறிவித்தபோதும் எந்த பெரிய கட்சியும் கூப்பிட்டு பேசவில்லை ! திமுக வை தாக்கிப் பேசினால் அதிமுக அழைக்கும் என்ற நினைப்பும  வீண் ஆனது ! தனிமையில் இனிமை காண முடியுமா ? என புலம்ப ஆரம்பித்து விட்டார் நம்மவர் !

ம தி மு க - வி சி நிலை என்ன ?

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு -திமுக கூட்டணியில் ம தி மு க 4 சீட் எதிர்பார்க்க , ஒரு சீட் கொடுப்பதாகவும் - வி சி கட்சி 2 சீட் கேட்டு ஒரு சீட் தர சம்மதம் என திமுக சொல்லி விட்டதாம் ! இந்த நிலையில் 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள முக ஸ்டாலின் சென்னை திரும்பியதும் முடிவு அறிவிப்பார் என தெரிகிறது !

தம்பிதுரை திடீர் பல்டி!

தமிழகத்தில் பிஜேபியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறி வந்த மக்களவை துணை சபா நாயகர் தம்பிதுரை, கூட்டணி ஏற்பட்ட பிறகு - இந்த கூட்டணியால் தமிழகத்திற்கு நன்மை ஏற்படும் என்று கூறியுள்ளார் !

காங்கிரசுக்கு 10 தொகுதிகள் - திமுக ஒதுக்கியது !

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார் ! தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் கள் முகுல் வாஸ்ணிக், சஞ்சய் தத், வேணுகோபால், திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன் , டி ஆர் பாலு, பொன் முடி ஆகியோர் உடன் இருந்தனர் !

இந்தியா - சவூதி உறவு !

இந்தியா - சவூதி உறவு நமது மரபணு விலேயே உள்ளது ,என்று  அந்நாட்டு மன்னர் முஹம்மது பின் ஸல்மான் டெல்லியில் கூறினார் ! பிரதமர் மோடி  முன்னிலை யில் இந்தியாவில்  ரூ 7 1/4 லட்சம் கோடி முதலீடு செய்ய ஒப்புதல் !

கூட்டணி -விஜயகாந்த் தீவிரம் !

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த் கூட்டணி குறித்த பணிகளை முடுக்கி விட்டு இருக்கிறார் ! அகில இந்திய -மாநில கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக ப்ரேமலதா கூறியுள்ளார் !

அப்பாவி மக்களை துன்புறுத்த வேண்டாம் !-மஹபூபா

காஷ்மீர் தீவிரவாதி களை தேடுவதாக கூறி அப்பாவி மக்களை துன்புறுத்தக் கூடாது !- மஹ்பூபா முப்தி 

பயங்கரவாத தாக்குதல் -ராகுல் கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார் !  

மக்கள் பணத்தை திருடியது யார் ? ராகுல் காந்தி தாக்கு!

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் முகாம் போட்டு நான்தான்  ஹீரோ என்று காட்டுகிறார் ! வெளியே போ என வைகோ மற்றும் பெரியாரிய இயக்க தொண்டர்கள் கருப்பு கோடி காட்டினார்கள் ! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ  ''மக்கள் பணத்தை திருடி அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு வாரி வழங்கிவிட்டார்! " என்று சாடி இருக்கிறார்.

கமலஹாசன் பேச்சுக்கு திமுக கண்டனம் !

கமலஹாசன் கோவையில் பேட்டி அளித்த போது , திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் கை குலுக்கலில் கை அழுக்காகி விட வேண்டாம் என குறிப்பிட்டதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இது புதிய தீண்டாமையா என்றும் கேட்டு உள்ளனர் ! கூட்டணி வேண்டாம் என்பவரிடம் பேச்சு வார்த்தைக்கு புதிய காங்கிரஸ் தலைவர் அழகிரி அழைப்பு விடுத்தது ஏன் என தெரியவில்லை என்று கம்யூனிச தலைவர் முத்தரசன் கூறியுள்ளார் !

போலீஸ் அதிகாரிகளின் பதக்கங்களை பறிப்பதற்கு எதிர்ப்பு !

போலீஸ் கமிஷனரை சிபிஐ  அதிகாரிகள் கைது செய்ய முயற்சி செய்ததை கண்டித்து , முதல்வர் மம்தா வுடன் அமைதி போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகளின்  சாதனை பதக்கங்களை மத்திய அரசு பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்ட மம்தா பானர்ஜி, மே வங்க அரசு சார்பில் தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் !

வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யக் கூடாது !-உயர் நீதிமன்றம்

குடும்ப பிரச்சனை , வணிக பிரச்சனை , மற்றும் சிறு சிறு குற்றச் செயல்களுக்கு பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரகளை கைது செய்ய தேவை இல்லை ! குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு கைது செய்வது கூடாது ! இவ்வாறு போலீஸ் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ( 7-2-2019 )

நாடாளுமன்ற துளிகள் -சுவையான செய்திகள் !

நாடாளுமன்றத்தில்  பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார் ... ஆதாரம் இல்லாமல் பிஜேபி ஆட்சியை குறை சொல்வதாக காங்கிரஸ் கட்சியை ஒரு பிடி பிடித்தார் ! மாற்றத்தை கொண்டு வருவது தான் நோக்கம் என்றார். அமைச்சர் நிதின் கட்காரி பேச்சை பாராட்டினார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ! ( 7-2- 2019)

மத வாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி ! மு .க .ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்களை நம்பித்தான் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறோம். மத வாத பிஜேபி அரசுக்கும் கமிஷன் -கலேகஷன் - கரப்ஷன் அதிமுக அரசுக்கும் தக்க பாடம் புகட்டுகின்ற வகையில் வரும் தேர்தலை பயன்படுத்திக் கொள்ளுங்கள் ! இவ்வாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை திருமண விழாவில் பேசினார்.

டிரம்பு - கிம் சந்திப்பு வியட்நாமில் !

அமெரிக்க அதிபர் டி ரம்பு வட கொரிய அதிபர் கிம் உடன் வியட்நாம் நாட்டில் வரும் 28, 29 தேதிகளில் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார் ! வல்லரசு நாடுகளுக்கு அஞ்சாமல் அணு ஆயுதங்களை வட கொரிய அதிபர் கிம் தொடர்ந்து  சோதனை செய்து வந்ததால் அமெரிக்கா அந்த நாட்டின் மீது பொருளாத ாரதடைகளை விதித்தது . 

ஏழைகளுக்கு பிஜேபி ஆட்சியில் ஏதும் இல்லை !-எச்சூரி

பல கோடி சொத்துக்களை வைத் துள்ள பெரும் தொழில் அதிபர் களுக்கு மட்டுமே சலுகைகள் -  ஆனால் ஏழைகளுக்கும் துன்பம் -துயரம் மட்டுமே பிஜேபி ஆட்சியில் ! இவ்வாறு கம்யூனிச தலைவர் எச்சூரி கேரள கூட்டத்தில் பேசினார்.

ஆசிரியர் - மாணவர்கள் பாசப்பிணைப்பு !

திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலை பள்ளி ஆசிரியர் சுரேஷ் பணி இட மாற்றம் செய்யப்பட்டு வேறு பள்ளிக்கு செல்ல முயன்ற நேரம் மாணவ மாணவிகள்  " வேறு ப ள்ளிக்கு செல்ல வேண்டாம் " என அழுது தடுத்த காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது !

விளையாட்டு காட்டும் விஜய் மல்லையா !

இந்தியாவின் பொது துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பிச் சென்று விட்டார். அவரைத் திரும்ப இந்தியா கொண்டுவர மத்திய அரசு வழக்கு தொடுத்தது. லண்டன் நீதிமன்றம் அவரை நாடு கடத்த உத்தரவு இட்டது! இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசும் அதற்கான நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் மல்லையா மேல் முறையீடு செய்ய இருக்கிறார் ! இதனால் இந்தியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது !