தேர்தல் நேரத்தில் இலவச திட்டங்கள் அமல் !

பலரும் சொல்வது மக்களுக்கு இலவசம் கொடுப்பதை விடவேலை வாய்ப்பை உருவாக்குவது தான் சிறந்தது என்று ! ஆனால் அரசியல் கட்சிகள் தமது ஆட்சியில் இலவச திட்டங்களை செயல்படுத்த வேகம் காட்டி வருகிறார்கள்! பொங்கல் பண்டிகைக்கு அதிமுக அரசு ரூ 1000 வழங்கியது! விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறிய மோடி அரசு ரூ 6000 விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறி ஒரே நேரத்தில் ரூ 2000 வீதம் முதல் தவணையாக 1 கோடி பேருக்கு வங்கி கணக்கில் சேரும் வண்ணம் பட்டனை அழுத்தி தொடங்கி வைத்துள்ளார்! தமிழக அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ 2000 வழங்க கணக்கெடுப்பு நடத்துகின்றது ! தேர்தல் நெருக்கத்தில் இவ்வாறு கொடுப்பது வாக்குப் போட பணம் கொடுப்பது போலத் தானே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்!

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா