குடியுரிமை திருத்த சட்டம், மக்கள்தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் மாபெரும் சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது ! இதனைத் தொடர்ந்து, வாலாஜா சாலையில் லட்சம் பேர் திரண்டனர் ! கலைவாணர் அரங்கில் இருந்து சேப்பாக்கம் வரை பேரணி நடைபெற்று முடிந்தது. இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன், எம்.எல்.ஏ.க்கள் முஹம்மது அபூபக்கர், தமீமுல் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் டாக்டர் சேமுமு. முகமதலி, ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா உட்பட இஸ்லாமிய அமைப்புகளின் , தலைவர்கள், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரமுகர்களும் பங்கேற்றனர். ** திருச்சி, நெல்லை, மதுரை முதலான நகரங்களிலும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் ! ** அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு - கண்காணிப்பு !