அமைதிக்கு முஸ்லிம் லீக் தலைவர்கள் முயற்சி !

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் மகளிர் போராட்டம் நடைபெற்றபோது திடீர் என போலீசார் தடியடி  நடத்தினர் !  இதனால் மகளிர் சிதறி ஓடினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  கல்வீச்சில் காயமடைந்ததாக 3 போலீசார் ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தடியடி தாக்குதலைக் கண்டித்து   தமிழகம் முழுவதும்  இஸ்லாமிய அமைப்பினர், கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
இ.யூ.முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர், எம்.பி. நவாஸ் கனி முதலான தலைவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து தடியடி நடத்த உத்தரவு பிறப்பித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.  அமைதிக்கான ஒத்துழைப்பு அளிப்பதாகவும் உறுதி கூறினர்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா