புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு ! - வானிலை ஆய்வு மையம் ** தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளில் பரவலாக மழை !
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர் முதலான மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது ! ** தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு நடவடிக்கை! ** குற்றாளத்தில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை !
இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்தியா வருகை தந்தார் ! டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வரவேற்பு அளித்தனர் ! * மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோத்தபய வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தினார் !
கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்களைத் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து மீண்டும் செங்கல்பட்டு மாவட்டம் உருவானது !வண்ணமிகு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர் !
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆக பதவி ஏற்றார் ! ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அம்மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு உத்தவ் தாக்கரேக்கு நேரில் வேண்டுகோள் விடுத்தார் !
திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்தித்துப் பேசினர் ! ** எந்த ஆதாரமும் இல்லாமல் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் பொய் வழக்கில் 100 நாட்களாக ப.சிதம்பரத்தை சிறை வைத்துள்ளனர். - கார்த்தி ப.சிதம்பரம் எம்.பி. பேட்டி !
மகாராஷ்டிராவில் பிஜேபி ஆட்சி அமைத்த வேகத்தில் கவிழ்ந்தது பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் படுதோல்வி என எதிர்க்கட்சிகள் கருத்து ! ** அரசியல் சாசனத்துக்கு எதிராக பெரும்பான்மை இல்லாத பிஜேபி கூட்டணியை ஆட்சி அமைக்கச் செய்த ஆளுநர் கோஷியாரி பதவி விலக வேண்டும் என கம்யூ. தலைவர் முத்தரசன் உள்பட தமிழக - தேசிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர் ! இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி , அமித்ஷா பின்னணி உள்ளது என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர் !
***மகாராஷ்டிராவில் ரகசியமாக - அவசரமாக ஆட்சி அமைத்த பிஜேபி முதல்வர் பட்னாவிஸ் ராஜினாமா செய்தார் ! ** காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி சார்பாக உத்தவ் தாக்கரே முதல்வர் ஆக பதவி ஏற்கிறார் !
மகாராஷ்டிராவில் ஜனநாயக படுகொலை செய்து ஆட்சி அமைத்த பிஜேபியைக் கண்டித்து சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்றம் முன்பு காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர்கள் -எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் !
சென்னை; அதிமுக பொதுக்குழு -செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் முதல்வர் இ.பி.எஸ். ( இணை ஒருங்கிணைப்பாளர் ), துணை முதல்வர் ஓபிஎஸ் ( ஒருங்கிணைப்பாளர்) முன்னிலையில் நடைபெற்றது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஏமாற்றி, பிஜேபி அமைச்சரவை பதவிப்பிரமாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சரிபார்க்காமல் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தது செல்லாது என காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ! பிஜேபி கூட்டணி அரசு இன்றோ நாளையோ பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட கோரிக்கை !
மும்பை; பிஜேபிக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. அஜித்பவார் தனிப்பட்ட முறையில் பிஜேபிக்கு ஆதரவு ! கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும் ! -சரத்பவார் எச்சரிக்கை ! * மகாராஷ்டிராவில் ஆளுநர் பிஜேபி முதல்வருக்கு ரகசிமாக பதவிப்பிரமாணம் செய்துவைத்தது ஏன் ? - காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கேள்வி !
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குடும்பத்தைச் சேர்ந்த அஜித்பவாரை விலைக்கு வாங்கி பிஜேபி ஆட்சி அமைத்துள்ளது. பிஜேபி தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கண்டனம் !
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆவார் என்ற நிலையில், திடீர் திருப்பமாக பிஜேபி -தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவி ஏற்றார் !
வெப்பசலனம் காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் ! கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் திருச்செந்தூரில் 7 செ.மீ. மழை பதிவு ! - சென்னை வானிலை ஆய்வு மையம்
தொலைபேசிகளை ஒட்டுக்கேட்க சி.பி.ஐ. உட்பட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் ! இது தனி மனித உரிமைகளை பாதிப்பதாக குற்றச்சாட்டு !
சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படை ( எஸ்.பி.ஜி. ) பாதுகாப்பை மத்திய பிஜேபி அரசு ரத்து செய்ததற்கு நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கண்டனம் ! தி.மு.க. - காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு !
வாஷிங்டன்; தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் ! அமெரிக்கர்களுக்கும் அங்கு வாழும் இந்தியர்களுக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு ! முன்னதாக பல்வேறு விருதுகளைப் பெற்றார் !
லக்னோவில் முஸ்லிம் தனியார் சட்டவாரிய கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய மஸ்ஜித் கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பதில்லை எனவும் பாபரி மஸ்ஜித் நில வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
இலங்கை அதிபர் தேர்தல் - புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி (வாக்களிக்கச் சென்ற முஸ்லிம்கள் ) பயணித்த பேருந்து மீது அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கிச்சூடு ! பயணிகள் உயிர் தப்பினர் !
இலங்கை அதிபர் தேர்தல் - இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு ! கோத்தபய ராஜபக்சே - சஜித் பிரேமதாசா ஆகியோர் வேட்பாளர்களாக போட்டி ! * 80 சதவீதம் வாக்குப்பதிவு !
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசை ஆட்சி அமைக்க அதன் தலைவர் சரத்பவாருக்கு அழைப்பு விடுத்தார் மாநில ஆளுநர் ! நாளை காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன !
தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு - சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் ! - பாபரி மஸ்ஜித் வழக்கறிஞர் சஃபர்யாப் ஜீலானி ( முஸ்லிம் தனியார் சட்டவாரியம் சார்பில் பேட்டி )
வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு ! சிறுபான்மை மக்கள் அச்சத்தில் உள்ளனர் ! - வழக்கறிஞர் செந்தில்நாதன் ---- இந்த தீர்ப்பு நீதியாக இல்லை ! -ரவிக்குமார், விசிக. -
அன்பான நேயர்கள் - வாசகர்கள் - இதழியல் ஆர்வலர்களுக்கு, வாழ்த்துகள்! வேகமாக பிரபலமாகிவரும் உங்கள் செய்தி இணைய பத்திரிகைக்கு நீங்களும் செயதிகள் அனுப்பலாம் ! உங்கள் செய்திகளை சுருக்கமாக கமெண்ட் பகுதியில் பதிவு செய்யவும். கூகுலில் Ungal seythi என டைப் செய்தால் இந்த இணைய பக்கத்தை அடையலாம் ! உங்கள் அன்பையும் ஆதரவையும் ஆலோசனைகளையும் வேண்டுகிறேன் ! -ஆசிரியர்