Posts

Showing posts from March, 2019

இரண்டாம் முறையாக என்னையே பிரதமர் ஆக... -மோடி

2ம் முறையாகவும் மக்கள் என்னையே பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் ! மோடி நம்பிக்கை !

கேரள வயநாட்டில் ராகுல்காந்தி போட்டி !

கேரளா வயநாட்டில் ராகுல்காந்தி போட்டியிடுவாக காங்கிரஸ் அறிவித்துள்ளது !

மோடியுடன் மோத தயார் !- பிரியங்கா

கட்சி கட்டளையிட்டால் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நானும் போட்டியிடத் தயார் ! காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா அறிவிப்பு !

மதச்சார்பற்ற ஆட்சியே நோக்கம் !

மார்க்சிஸ்ட் கம்யூ. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்துள்ளனர். மேலும் மோடி ஆட்சியை நீக்கி, மதச்சார்பற்ற அரசை அமைப்பதே நோக்கம் என தெரிவித்துள்ளனர் !

தினகரன் கட்சிக்கு பரிசுப்பெட்டி சின்னம் !

அ.ம.மு.க. கட்சிக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால் தினகரன் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர் ! ஏற்கனவே குக்கர் சின்னம் மறுக்கப்பட்டதால் சோர்வடைந்து இருந்தனர் !

விஞ்ஞானிகள் சாதனையை தன் சாதனையாக மோடி கூறுவதா? -காங்கிரஸ்

விஞ்ஞானிகளின் சாதனைகளை தனது சாதனையாக காட்டுவதாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் ! மேலும் காபந்து சர்க்கார் நடத்தும் மோடி திடீர் அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி !

படிப்படியாக முதல்வர் ஆனேன் !-பழனிச்சாமி

அதிமுகவில் படிப்படியாக பல பதவிகள் வகித்து முதல்வர் ஆக உயர்ந்துள்ளேன் , ஸ்டாலின் போல அல்ல ! -தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிச்சாமி பேச்சு

ஓபிஎஸ் மகன் - ஸ்டாலின் விமர்சனம் !

ஜெயலலிதா இருந்திருந்தால் ஓபிஎஸ் மகனுக்கு சீட் கொடுத்திருப்பாரா ? -தேனியில் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்தபோது மு.க.ஸ்டாலின் பேச்சு !

மது போதை குற்றங்களுக்கு மாநில அரசே பொறு ப்பு ?

மதுபோதை குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி !

பொது மக்களிடம் பணம் பறிப்பதா?

தேர்தல் விதிகள் என்ற பெயரில் பறக்கும் படை அப்பாவி பொது மக்களிடமும் வியாபாரிகளிடமும் பணம் பறிமுதல் செய்வதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது ! இதுகுறித்து தேர்தல் கமிஷனிடம் வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் மனு அளித்துள்ளார்! மேலும், பிரபல நாளிதழ் இந்த பிரச்சனை குறித்து தலையங்கம் எழுதியுள்ளது !

பிரதமர் மோடி வாழ்த்து!

பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

தேர்தல் துளிகள்...!

*அ.ம.மு.க.வில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் வி.பி.கலைராஜன். **வி.சி.கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு !

பிரதமர் மோடி மீது பிரியங்கா புகார் !!

***வாரணாசியில் பரப்புரை மேற்கொண்ட பிரியங்கா காந்திக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் ! ***'மக்களை முட்டாள் என நினைக்காதீர் ' என பிரதமர் மோடியை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரி யங்கா காந்தி சாடினார். நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எதையுமே செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்!

கருணாநிதி கற்றுத் தந்த வழியில்...!

கருணாநிதி கற்றுத் தந்த வழியில், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தேன் ! -தஞ்சை பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

போட்டி போட்டு தேர்தல் அறிக்கை !

தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகளும் ஒரே நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன ! இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் ஏழை மக்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். ***தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், விவசாயத் துறைக்கு தனி பட்ஜெட், நீட் தேர்வு ஒழிப்பு, கல்விக்கடன் தள்ளுபடி முதலான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது !

தூத்துக்குடியில் கனிமொழி போட்டி !

தி.மு.க. சார்பில் கனிமொழி தூத்துக்குடியிலும் தயாநிதி மாறன் மத்திய சென்னை, டிஆர் பாலு ஶீபெரும்புதூர், ஆ.ராசா நீலகிரி ஆகிய தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள் !

போட்டி போட்டு தேர்தல் பட்டியல் !

***தி.மு.க. - அ.தி.மு.க. கட்சியினர் போட்டி போட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டு அசத்திவிட்டனர் ! மு.க.ஸ்டாலின் பட்டியல் வாசித்தபோது வேட்பாளர்கள் பெயர்களுடன் அவர்கள் பெற்ற பட்டங்களையும் வாசித்தது சிறப்பு! ***துணை முதல்வர் ஓபிஎஸ், அ.தி.மு.க. அணி வேட்பாளர்கள் பட்டியலை வாசித்தபோது பிஜேபி தலைவி தமிழிசை மட்டும் உடனிருந்தார். பிற கூட்டணி தலைகளைக் காணவில்லை ! ( அன்புமணி ராமதாஸ், விஜயகாந்த் தரப்பு ...)

நாளை தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் !

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிட மு.க.ஸ்டாலின் தீவிரம் !

முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி !

இ.யூ.முஸ்லிம் லீக் சார்பாக ராமநாதபுரம் தொகுதியில், வேட்பாளராக எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குநர் நவாஸ் கனி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் காதர் மைதீன் அறிவிப்பு !

மேலும் ஒரு காமுகன் நாகையில் கைது !

பொள்ளாச்சி சம்பவத்தை தொடர்ந்து, நாகை டாக்சி டிரைவர் சுந்தர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ! இவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் அவரது செல்போனில் உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது !

பாலியல் வழக்கு - கனிமொழி குற்றச்சாட்டு !

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல்வாதிகள் தொடர்பு மூடிமறைக்கப்படுவதாக கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார் !

பொள்ளாச்சியில் கல்லூரிகள் விடுமுறை !

பாலியல் வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால், பொள்ளாச்சியில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகர்கோவிலில் ராகுல்காந்தி !

நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரையை தொடங்கினார்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி, முஸ்லிம் லீக் தலைவர் காதர்மைதீன் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர் !

அரசியல் தலைவர் படங்களை அகற்ற உத்தரவு !

தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து அரசு அலுவலங்ளில் அரசியல் தலைவர்கள் படங்களை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ! நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் ஆசியா மரியம் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். தேர்தல் விளம்பர தட்டிகள், சுவர் விளம்பரங்களை அகற்ற -அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்!

கனிமொழி போராட்ட அறிவிப்பு !

கோவையில் பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தடையை மீறி போராட்டம் நடைபெறும் என கனிமொழி எம்பி பேட்டி !

பாலியல் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம் !

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஐஜி உத்தரவு !

நாளை வெப்பம் அதிகரிக்கும் !

தமிழகத்தில் சில இடங்களில் நாளை வெப்பம் அதிகமாக இருக்கும்! -வானிலை அறிக்கை

தேர்தல் நடத்தை விதிகள் அமல் !

தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது !

தேமுதிகவுக்கு 4 சீட்!

தேமுதிக ஒரு வழியாக அதிமுக கூட்டணியில் இணைந்தது! முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஸ், விஜயகாந்த் ஆகியோர் முன்னிலையில் 4 சீட் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது! இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் இ ந்த கூட்டணி வெற்றி கூட்டணி என குறிப்பிட்டார் !

மன்னிப்போம் -மறப்போம் !-ஜெயக்குமார்

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் அதிமுக எம்பிக்களை விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், அவரது பேச்சை மன்னிப்போம், மறப்போம் என்றார் !

சாதியைச் சொல்லி திட்டுவதாக மோடி உருக்கம் !

இந்தியாவுக்கு நான்தான் காவலாளி ! என்பது உட்பட பல வீர வசனங்கள் பேசிவந்த பிரதமர் மோடி, சென்னை கூட்டத்தில், எனது ஏழ்மையை - எனது பிற்படுத்தப்பட்ட சாதியை சிலர் விமர்சிக்கிறார்கள் என உருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது !

மகளிர் தினத்தில் மம்தா பிரசாரம் !

திரினாமுல் காங்கிரஸ் தலைவர் - மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாளை உலக மகளிர் தினத்தில் மக்களவை தேர்தல் பிரசாரம் தொடங்குகிறார் !

தே.மு.தி.க. கூட்டணி இழுபறி!

தேமுதிக எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதில் இழுபறி நிலை உள்ளது ! இன்று விஜயகாந்த் தலைமையில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ! துணை செயலாளர் சுதீஷ் அளித்த பேட்டியில், மத்திய அமைச்சர் பியூஸ்கோயலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதிமுக கூட்டணியில் எத்தனை இடம் என்பது நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார் !

முஸ்லிம் கட்சிகள் அதிருப்தி !

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இரு கம்யூ. கட்சிகளுக்கு தலா 2, வி.சி. கட்சிக்கு 2, மதிமுகவுக்கு 1+1, இ.யூ.முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 மட்டும் என முடிக்கப்பட்டுள்ளது! ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லாஹ் பல முறை சந்தித்துப் பேசியும் ஒரு இடம் கூட ஒதுக்காதது முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது!

பி.ஜே.பி. தலைவருக்கு கண்டனம் !

ஓட்டு வாங்குவதற்காக ராணுவ உடையில் பி.ஜே.பி. டெல்லி தலைவர் திவாரி பிரசாரம் ! இது வெட்கக்கேடான -கீழ்த்தரமான செயல் என திருனாமுல் காங். தலைவர் பிரையன் கண்டனம் !

வி.சி. கட்சிக்கு 2 தொகுதி !

வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன், தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு தொகுதிகள் கேட்ட நிலையில் 2 தொகுதி உறுதியாகி ஒப்பந்தம் கையெழுத்தானது! இந்நிலையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவு செய்யக்கூடாது என தொண்டர்களை திருமாவளவன் கேட்டுக்கொண்டார் !

காஷ்மீர் மக்கள் நிலை மோசம் !

மத்திய பி.ஜே.பி. ஆட்சியில், கடந்த 2 ஆண்டுகளில் காஷ்மீர் (மக்கள் ) நிலை மிகவும் மோசமடைந்தள்ளது ! முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி !

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை திட்டங்களை தொடங்கிவைத்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி எழுச்சி உரையாற்றினார் !