Posts

Showing posts from April, 2019

இலங்கையில் புதிய கட்டுப்பாடு !

முகத்தை யாரும் மறைத்துச் செல்லக் கூடாது ! இலங்கை அதிபர் மைத்ரி பால ஶசேனா புதிய ஆணை !

செய்தித் துளிகள் !

*இலங்கையில் காவல்துறை தலைவர் அதிரடி மாற்றம் ! ** மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது பிரதமர் மோடி கடும் தாக்கு! *** பிஜேபியில் ஓபிஎஸ் சேரப்போகிறாரா என கேள்வி கேட்ட நிருபரை மரியாதைக் குறைவாக பேசிய அதிமுக நிர்வாகிகள் !

மு.க.ஸ்டாலின் அலை !- ஐ.பெரியசாமி

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது ! திருப்பரங்குன்றம் வேட்பு மனு தாக்கலுுக்கு பிறகு ஐ.பெரியசாமி பேட்டி !

தவறான திசையில் இலங்கை குண்டு வெடிப்பு வழக்கு !

இலங்கையில் சிங்கள - தமிழர் பகைமையும் சண்டையும் நீண்ட காலம் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் பல இடங்களில் குண்டு வெடிப்பும் மனித உயிர்கள் பலியும் நிகழ்த்தப்பட்டதில் தேசிய தவ்ஹீத் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகள் தான் இதற்கு காரணம் என வழக்கம் போல செய்திகள் வெளியாகியுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத செயல் மனித குல விரோத செயலாகும். சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! அதே நேரத்தில் உண்மையான குற்றவாளிகளை விடுத்து தவறான திசையில் வழக்கு செல்வதாக தெரிகிறது. சிங்கள - பவுத்த தீவிரவாதிகளுக்கு இதில் தொடர்பும் நோக்கமும்இருக்கும் நிலையில், தவறான கைகாட்டுதலால் அப்பாவி முஸ்லிம்கள் தாக்கப்படும் சூழல் ஏறபட்டுள்ளது!

இலங்கை குண்டுவெடிப்பு - 200 பேர் பலி !

இலங்கையில் 2 தேவாலயங்கள் மற்றும் ஓட்டலில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 200 பேருக்கு மேல் பலி ! விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிபர் பால ஶசேனா அறிவிப்பு !

பொன் பரப்பி சம்பவம் -திருமாவளவன் பேட்டி !

பொன்பரப்பி தாக்குதல் சம்பவத்தால் 200 குடும்பங்கள் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் ! திருமாவளவன் வலியுறுத்தல்

தேர்தல் துளிகள் !

வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு - பல இடங்களில் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் தவிப்பு ! வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு !

அவதூறு கண்டித்து சாலை மறியல் !

ஒரு சமூகம் குறித்து வாட்ஸ் அப் பில் அவதூறு பரப்பியதாக சிவகங்கை - புதுக்கோட்டை மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் !

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

தேர்தல் நேரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது ! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

பிரதமர் மோடி பெருமிதம் !

தேர்தல் வாக்குறுதிகளை தான் நிறைவேற்றிவிட்டதாக பிரதமர் மோடி, பிரசார கூட்டத்தில் பேச்சு!

70 சதவீதம் வாக்குப்பதிவு !

தமிழகத்தில் 70 சதவீதம் வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது !

தமிழக தேர்தல் - தலைவர்கள் வாக்களித்தனர் !

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை, அமமுக துணை பொது செயலாளர் தினகரன் ஆகியோர் வாக்களித்தனர். திமுக - காங் . கூட்டணி வெற்றி பெறும் என கனிமொழி பேட்டி !

சிந்தித்து வாக்களிப்பீர் !

ஜாதி - மதம் பார்க்காமல் வாக்களிப்பீர் ! ஜனநாயகமா ? சர்வாதிகாரப் போக்கா ? சிந்தித்து வாக்களிப்பீர் !

மோடி மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே வருமான வரித் துறை சோதனை ! தேர்தல் ஆணையம் , அமலாக்கத் துறை போன்றவற்றை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார் ! -மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வேலூரில் தேர்தல் ரத்து !

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து ! ஜனநாயக படுகொலை! திமுக கண்டனம்

அமமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு !

தேனி - அமமுக அலுவலகத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு !

கனிமொழி வீட்டில் சோதனை !

கனிமொழி வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை ! இது தேர்தல் நேரத்தில் அச்சுறுத்தும் செயல் ! -கனிமொழி பேட்டி

இராமனாதபுரம் தொகுதி -நவாஸ் கனிக்கு வரவேற்பு !

இராமனாதபுரம் தொகுதியில் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வாக்கு சேகரிக்க சென்றபோது, பொது மக்களிடம் அவருக்கு உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது ! அரசியலுக்கு புதியவர், எளிமையானவர், மக்களுக்கு நல்ல பல திட்டங்களை நிறைவேற்றுவார் என நம்புவதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள் !

தமிழகத்தில் ராகுல்காந்தி சூறாவளி பிரசாரம் !

தமிழகம் வருகை தந்த ராகுல்காந்தி தேனி, சேலம் உட்பட 4 இடங்களில் திமுக -காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். நீட் தேர்வு தொடர்பாக தமிழகத்தின் உணர்வை மதித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக பேசினார் !

தேசிய பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் அலட்சியம் !-மோடி

தேசிய பாதுகாப்பு பற்றி காங்கிரஸ் கட்சிக்கு எந்த திட்டமும் இல்லை ! கோவையில் பிரதமர் மோடி தாக்கு !

மோடியின் துக்ளக் ஆட்சி !- மு.க.ஸ்டாலின் தாக்கு

கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி, பணம் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததால் மக்கள் நடுத்தெருவுக்கு வந்தனர். இந்த மோடியின் துக்ளக் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்! -மு.க.ஸ்டாலின் பேச்சு

சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைந்தார் !

நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்! பிரதமர் மோடி மீது கடும் தாக்கு!

பிஜேபி வட இந்திய கட்சி! - ப.சிதம்பரம்

பிஜேபி வட இந்திய கட்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து !

தி.மு.க. கூட்டணிக்கு 33 இடங்கள்!- கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிக்கு 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு ! அதிமுக கூட்டணிக்கு 5 முதல் 7 இடங்கள் கிடைக்கும் என மக்கள் கண்காணிப்பகம் சார்பில் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது !

ஆளுநர் கல்யாண் சிங் மீது நவடிக்கை -ஜனாதிபதி அனுமதி !

பிரதமர் மோடி தான் மீண்டும் பிரதமர் என்று ஒரு கட்சிக்கு ஆதரவாக ஆளுநர் கல்யாண் சிங் பேசியது தேர்தல் விதிமீறல் என தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது. இதனைத் தொடர்ந்து, கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்துறை அமைச்சகத்துக்கு அனுமதி அளித்துள்ளார் !

கோவையைக் கைப்பற்ற பிஜேபி தீவிரம் !

எப்படியும் கோவை மக்களவை தொகுதியை கைப்பற்ற பிஜேபி பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது ! இதற்காக வடநாட்டில் இருந்து கட்சித் தலைவர் அமித்ஷா கோவை வந்திருந்தார். இதற்காக கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டு அமித்ஷா வாகன பவனிக்கு வழிவிட்டது போலீஸ் ! பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு கேட்டவர், தமிழகத்தை நாங்கள் அலட்சியப்படுத்தவில்லை, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார் ! -நமது நிருபர்

வயநாட்டில் ராகுல்காந்தி வேட்பு மனு !

கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார் !

ஜி.கே.வாசன் பேச்சுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு !

மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பேசியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் ! முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரான வாசன், காங்கிரஸ் கட்சியை ஒழிப்பேன் என்று கூறிவரும் மோடியை புகழ்ந்து பேசுவதா ? என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் !

மோடிக்கு ஏற்ற மூடி யார் ?- ஸ்டாலின்

மேட்டுப்பாளையம்; ''பிரதமர் மோடிக்கு ஏற்ற மூடியாக முதல்வர் பழனிசாமி இருக்கிறார் !'' நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

காங்கிரஸ் கரிசனம் ! - மோடி தாக்கு!

தேர்தல் நேரத்தில் தான் காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள் நினைப்பு வரும் ! பிரதமர் மோடி தாக்கு!

நீட் தேர்வு ரத்து !-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டு உள்ளது! ஏழைகளுக்கு நிதி உதவி திட்டம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து உட்பட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

உங்கள் செய்தி -நமது செய்தி !

சுருக்கமான - சுவையான செய்திகளுக்கு உங்கள் செய்தி ! Ungal seythi.blogspot.com முகநூலில் meeramaideen jamal பக்கத்தில் காணுங்கள் ! மேலும் நமது செய்தி @ facebook பக்கத்தில் பாருங்கள் !

ராகுல்காந்தி தமிழகம் வருகை !

பிரதமர் மோடி 8ம் தேதி கோவை வருகை தருகிறார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். வரும் 10ம் தேதி திருச்சி வந்து அங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், கடலூர் ஆகிய இடங்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார் !