Posts

Image
பிக்பாஸ்- சபாஷ் பொன்னம்பலம்! தொலைக்காட்சியில் பரபரப்பை ஏற்படுத்த கோடிகளை அள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை நேயர்கள் உண்மை என நினைத்து ஏமாறுகிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விஜய் டிவியில் நடிகர் கமல் தலைமை ஏற்று நடத்துகிறார். இதில் நடிப்பவர்களிடையே ஒழுக்கம்& கட்டுப்பாடு ஏதும் இல்லை என நேயர்கள் கூறுகிறார்கள்.  அதில் இருந்து சில காட்சிகள்: பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் மமதி சாரி. இதையடுத்து அனந்த் வைத்தியநாதனை வெளியேற்றினார்கள். அவர் வெளியே செல்லும் முன்பு அவருக்கு ஒரு அதிகாரம் கொடுத்தார் கமல். அதாவது தவறாக நடந்த யாராவது ஒருவரை சிறையில் தள்ளும் அதிகாரம் அனந்த் வைத்தியநாதனுக்கு கொடுக்கப்பட்டது.  அனந்த், "தாங்கள் எந்த மாதிரியான உடை அணிய வேண்டும், ஆண்களுடன் எப்படி பழக வேண்டும் என்பது பெண்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது அவர்களை பற்றி தவறாக பேசிய பொன்னம்பலத்தை சிறையில் அடைக்குமாறு கூறுகிறேன்" என்றார் அனந்த். இது பெண்களின் பாராட்டைப் பெறுவதற்காக இப்படி அவர் கூறியிருக்கலாம். பிக் பாஸ் வீட...

உலமாக்கள்மற்றும் பணியாளர்கள் நல வாரிய நலத்திட்ட உதவிகள்!

 உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ் தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியுடையவராவர்.  உறுப்பினார்கள் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற உறுப்பினருக்கு ஓர் அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும். உறுப்பினர் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.  வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விவரம்: கல்வி உதவித்தொகை (10ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை அவரவர் பாடப்பிரிவி...

ஹைதராபாத் மெக்கா பள்ளி குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு விடுதலை- நீதிபதி ராஜினாமா!

ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பு வழக்கில் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  கடந்த 2007, மே 18ம் தேதி சார்மினாருக்கு அருகில் இருந்த மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்த போது சக்திவாய்ந்த வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் போது வெடிக்காத 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர், இதோடு மசூதிக்கு வெளியே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் 5 பேர் உயிரிழந்தனர்.  இந்து அமைப்பைச் சேர்ந்த அசீமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, பாரத்பாய், ரஜேந்தர் செயத்ரி உள்ளிட்ட 8 பேர் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என்று என்.ஐ.ஏ குற்றம்சாட்டியது. இவர்களில் 5 பேருக்கான தீர்ப்பு இன்று (16-4-2018 ) என்ஐஏ நீதிமன்றம் வழங்கியது. தீர்ப்பை வாசித்த நீதிபதி ரவீந்திர ரெட்டி, உரிய ஆதாரங்கள் இல்லாததால் இவர்கள் 5 பேரும் விடுவிக்கப்படுவதாக கூறி 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.  இதைத் தொடர்ந்து ரவீந்திர ரெட்டி த...

இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக்!

Image
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் ஷாரூக் என்ற அந்த இளைஞர் வடிவமைத்துள்ள செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம் மட்டுமே. இந்தியாவின் இளம் விஞ்ஞானி என்ற பட்டம் வெற்ற இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 750 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். அறிவு திறமைக்கும், பள்ளி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று நிருபித்துள்ளார், இந்த இளம் விஞ்ஞானி.  இவர் வடிவமைத்துள்ள சிறிய வடிவிலான செயற்கைக்கோள் வரும் ஜூன் 21ம் தேதி விண்ணில் பறக்கிறது. 240 நிமிடங்கள் மட்டுமே விண்ணில் இருக்கும் இந்த செயற்கைக் கோள் முப்பரிமாண கார்பன் ஃபைபரின் இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும். இம்மாணவனின் அறிவியல் திறன் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மைய ஆராய்ச்சியாளர்களால் பாராட்டப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு, ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.  ஆந்திரா மாநிலம் திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலையில், வானியல் பேராசிரியராக பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் முகம்மது ரிஃபாத் ஷாருக்ராஜ், (வயது 17) பள்ளப்பட்டி கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் ...

இந்தியாவில் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்களுக்கு ஆபத்து!

  அனைத்துக்குமே ஆதார் அட்டைகள் பயன்படுத்தும் நிலையால் தனி நபர் தகவல்கள் பரவலாக விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்றது. உச்சநீதிமன்றமோ இதற்கு ஆதார் கட்டாயமில்லை என்று உத்தரவிட்டது. மேலும் செல்பேசி சிம்கார்டுகள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று நீதிமன்றமே கூறியது. ஜியோ சிம்கார்டு பெறுவதற்கு ஆதார் அட்டையைத்தான் கேட்கிறார்கள். இதனால் தனிநபர் உரிமை பாதுக்காக்கப்படும் நிலை குறைந்துள்ளது.   ஒரு நிறுவனத்திற்கு சென்று உங்கள் பெயரைச் சொன்னால் உங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அவர்கள் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களின் தனியுரிமையை பாதிக்கும் செயலாகும். மோசடிப்பேர்வழிகள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் குற்றங்கள் பெருகும். இதன் மூலம் வங்கிகளில் உள்ள பணம் டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கப்படலாம்.   சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் வெளியான தகவல்களில் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் வெளியாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் குறைந்த அளவு பாதுகாப்பு நடைமுறைகளே...

துருக்கி அதிபருக்கு இந்தியாவில் சிகப்பு கம்பள வரவேற்பு !

Image
  துருக்கி நாட்டு அதிபருக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்காக அந்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அதிபர் தய்யிப் உர்துகான் அமோக வெற்றி பெற்றார்.  இந்த நிலையில் தனது மனைவி எமி உர்துகான் மற்றும் துருக்கி நாட்டு முக்கிய அமைச்சர்கள், உயரதிகாரிகள் என சுமார் 150 பேர் அடங்கிய குழுவினருடன் இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் தய்யிப்  உர்துகானுக்கு டெல்லியில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.     இன்று காலை டெல்லி  குடியரசு தலைவர் மாளிகையில் தய்யிப் உர்துகானுக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுகொண்ட அவர் டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.   பின்னர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். இந்தியா - துருக்கி இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு...

சீமைக்கருவேல மரங்கள் வில்லனா, நண்பனா?

  சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான தனிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்று நீதிபதிகளும் கண்காணித்து வந்தனர்.  இந்தநிலையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு எதிராக வி.மேகநாதன் என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.   அதில், சீமை கருவேல மரம் பல்வேறு நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இந்த மரம் ஏராளமாக உள்ளது. குறிப்பாக வறட்சிப்பகுதிகளில் இந்த மரம் அதிக அளவில் வளருகிறது. இந்த மரம், எரிபொருளாகவும், நிழல் தரும் மரமாகவும் திகழ்கிறது. மண்ணின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், காற்றின் வேகத்தை குறைப்பதற்கும் இந்த மரம் உதவியாக இருக்கிறது. பெரும்பாலான கிராமப்புறங்களில், இந்த மரத்தை விறகாக பயன்படுத்துகின்றனர். இந்த மரத்தை வெட்டி விறகாக விற்பனை செய்பவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.   கருவேலம் மரம் வளர்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட...