இந்தியாவில் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்களுக்கு ஆபத்து!

  அனைத்துக்குமே ஆதார் அட்டைகள் பயன்படுத்தும் நிலையால் தனி நபர் தகவல்கள் பரவலாக விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்றது. உச்சநீதிமன்றமோ இதற்கு ஆதார் கட்டாயமில்லை என்று உத்தரவிட்டது. மேலும் செல்பேசி சிம்கார்டுகள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று நீதிமன்றமே கூறியது. ஜியோ சிம்கார்டு பெறுவதற்கு ஆதார் அட்டையைத்தான் கேட்கிறார்கள். இதனால் தனிநபர் உரிமை பாதுக்காக்கப்படும் நிலை குறைந்துள்ளது.

  ஒரு நிறுவனத்திற்கு சென்று உங்கள் பெயரைச் சொன்னால் உங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அவர்கள் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களின் தனியுரிமையை பாதிக்கும் செயலாகும். மோசடிப்பேர்வழிகள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் குற்றங்கள் பெருகும். இதன் மூலம் வங்கிகளில் உள்ள பணம் டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கப்படலாம்.

  சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் வெளியான தகவல்களில் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் வெளியாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் குறைந்த அளவு பாதுகாப்பு நடைமுறைகளே இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த சில மாதங்களில் இண்டர்நெட் மற்றும் சமூக மையத்தின்படி, அரசு மையம் மூலம் இயக்கக்கூடிய நான்கு அரசாங்க டேட்டாபேஸ்களை ஆய்வு செய்த போது, இவற்றின் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்கள் மற்றும் 10 கோடி பேரின் வங்கி கணக்கு சார்ந்த தகவல்கள் முறையற்ற பாதுகாப்பு வழிமுறைகளால் வெளியாகியிருக்கும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது.

  மற்ற அரசு மையங்கள் மற்றும் நம்பத்தகுந்த நிறுவனங்களால் வெளிப்படையாக இயக்க வழி செய்யும் படி இதுபோன்ற டேஷ்போர்டுகள் உருவாக்கப்பட்ட நிலையில், இவற்றை பாதுகாக்க பின்பற்றப்படும் வழிமுறைகள் காலம் கடந்துவிட்டதால் ஆதார் தகவல்களை மிக எளிதாக இயக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

  இத்துடன் என்.எஸ்.ஏ.பி. தளத்தில் அதிகப்படியான தகவல்களை டவுன்லோடு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனாளர்களின் எண், பெயர், அப்பா / கணவன் பெயர், வயது, பாலினம், வங்கி அல்லது தபால் அலுவலக அக்கவுண்ட் எண் உள்ளிட்ட தகவல்கள் மாவட்டம் மற்றும் மாநலம் வாரியாக டவுன்லோடு செய்ய வழி செய்கிறது.
 பொதுமக்கள் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் லாக்-இன் வசதி வைத்துள்ள யார் வேண்டுமானாலும் பெற முடியும். இதனால் ஆதார் அட்டைகளை அரசு நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
-ஜே.எம்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா