பிக்பாஸ்- சபாஷ் பொன்னம்பலம்!

தொலைக்காட்சியில் பரபரப்பை ஏற்படுத்த கோடிகளை அள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை நேயர்கள் உண்மை என நினைத்து ஏமாறுகிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விஜய் டிவியில் நடிகர் கமல் தலைமை ஏற்று நடத்துகிறார். இதில் நடிப்பவர்களிடையே ஒழுக்கம்& கட்டுப்பாடு ஏதும் இல்லை என நேயர்கள் கூறுகிறார்கள்.
 அதில் இருந்து சில காட்சிகள்: பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் மமதி சாரி. இதையடுத்து அனந்த் வைத்தியநாதனை வெளியேற்றினார்கள். அவர் வெளியே செல்லும் முன்பு அவருக்கு ஒரு அதிகாரம் கொடுத்தார் கமல். அதாவது தவறாக நடந்த யாராவது ஒருவரை சிறையில் தள்ளும் அதிகாரம் அனந்த் வைத்தியநாதனுக்கு கொடுக்கப்பட்டது.
 அனந்த், "தாங்கள் எந்த மாதிரியான உடை அணிய வேண்டும், ஆண்களுடன் எப்படி பழக வேண்டும் என்பது பெண்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது அவர்களை பற்றி தவறாக பேசிய பொன்னம்பலத்தை சிறையில் அடைக்குமாறு கூறுகிறேன்" என்றார் அனந்த். இது பெண்களின் பாராட்டைப் பெறுவதற்காக இப்படி அவர் கூறியிருக்கலாம். பிக் பாஸ் வீட்டில் சில பெண்களும், ஆண்களும் நடந்து கொள்ளும் விதம் முகம் சுளிக்க வைக்கிறது என்று பார்வையாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அது குறித்து துணிச்சலாக பேசிய பொன்னம்பலம் கெட்டவர் என இவர் கூறியது வேடிக்கை.
" பிக் பாஸ் வீட்டில் இருந்து நீங்கள் கிளம்புவதாக இருந்தால் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கமல் கேட்டதற்கு "வரம்பு மீறி போக வேண்டாம். குழந்தைகளில் இருந்து பெரியவர்களை வரை பார்த்துக்கிட்டு இருக்கிறார்கள். அதனால் சட்டத்திற்கு கட்டுப்பட்டு மக்களுக்கு ஒரு நல்ல நிகழ்ச்சியாக கொடுங்கள்"
- என்று பொன்னம்பலம் தெரிவித்தார். மேலும் '' தவறு நடந்தாலும் திருத்திக் கொள்ளுங்கள். இந்த இடம் திருந்தத் தான். நம் தமிழ் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சொல்கிறேன். தமிழ் மக்கள் போகப் போக தமிழை மறந்துவிடாமல், தமிழையும் காத்து, தமிழ் பண்பையும் காக்க வேண்டும்'' என்றார் பொன்னம்பலம். ''இதை நீங்கள் சொல்லவில்லை என்றால் நான் சொல்லியிருந்திருப்பேன்'' என்றார் கமல். பொன்னம்பலம் கூறியதை கேட்டு பார்வையாளர்களே கை தட்டி அவரை பாராட்டினார்கள். கமல் கூட அவரின் பேச்சை ஆமோதித்த நிலையில் அனந்த வைத்தியநாதன் கூறியது சரிதானா?
-மீராப்பிரியன்

Comments

Popular posts from this blog