துருக்கி அதிபருக்கு இந்தியாவில் சிகப்பு கம்பள வரவேற்பு !

  துருக்கி நாட்டு அதிபருக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்காக அந்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அதிபர் தய்யிப் உர்துகான் அமோக வெற்றி பெற்றார்.

 இந்த நிலையில் தனது மனைவி எமி உர்துகான் மற்றும் துருக்கி நாட்டு முக்கிய அமைச்சர்கள், உயரதிகாரிகள் என சுமார் 150 பேர் அடங்கிய குழுவினருடன் இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் தய்யிப்  உர்துகானுக்கு டெல்லியில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்று காலை டெல்லி  குடியரசு தலைவர் மாளிகையில் தய்யிப் உர்துகானுக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுகொண்ட அவர் டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
  பின்னர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். இந்தியா - துருக்கி இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாடுகளுக்கு இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகலாம்.

Comments

Popular posts from this blog