சீமைக்கருவேல மரங்கள் வில்லனா, நண்பனா?
சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான தனிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்று நீதிபதிகளும் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு எதிராக வி.மேகநாதன் என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.
அதில், சீமை கருவேல மரம் பல்வேறு நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இந்த மரம் ஏராளமாக உள்ளது. குறிப்பாக வறட்சிப்பகுதிகளில் இந்த மரம் அதிக அளவில் வளருகிறது. இந்த மரம், எரிபொருளாகவும், நிழல் தரும் மரமாகவும் திகழ்கிறது. மண்ணின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், காற்றின் வேகத்தை குறைப்பதற்கும் இந்த மரம் உதவியாக இருக்கிறது. பெரும்பாலான கிராமப்புறங்களில், இந்த மரத்தை விறகாக பயன்படுத்துகின்றனர். இந்த மரத்தை வெட்டி விறகாக விற்பனை செய்பவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.
கருவேலம் மரம் வளர்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மரம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது. உலகத்துக்கு ஒரு பசுமைப் போர்வையாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கால்நடைகளுக்கு தீவனமாகவும், வனவிலங்குகளுக்கு உணவாகவும் இந்த மரம் உள்ளது. அத்துடன் காகிதம், அட்டை தயாரிக்கவும், மரச்சாமான்கள் செய்வதற்கும், நிலங்களுக்கு வேலியாகவும் பயன்படுகிறது.
இந்த மரத்தில் மருத்துவ குணங்களும் உள்ளன. இந்த மரம் எங்கெல்லாம் வளர்கிறதோ, அந்த நிலத்தில் நைட்ரஜன், கந்தகம் வளங்கள் அதிகரிக்கின்றன. இந்த மரம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பல இடங்களில் பரவி வளர்ந்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறினாலும், இதை முற்றிலுமாக ஒரேநாளில் அழிக்க முடியாது. இதற்கு அறிவியல் பூர்வமான விதிமுறைகள் வேண்டும். இந்த மரத்தை திடீரென ஒரேநாளில் முற்றிலுமாக அழிப்பது, கிராம மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மண்ணின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் இந்த மரத்தை வெட்டுவதால் மண்ணுக்கும் பாதிப்பு ஏற்படும்.
மலைப்பகுதிகளில் உள்ள இந்த மரத்தை வெட்டுவதால், மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிழல் தரக்கூடிய வகையில் மாற்று மரங்களை நடாமல், இந்த சீமை கருவேல மரங்களை வெட்டுவதை ஏற்க முடியாது. அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே, இந்த மரங்களை வெட்டவேண்டும்.
இந்த மரம் தடை செய்யப்பட்டது என்று அறிவிக்கும் விதமாக எந்த ஒரு சட்டமும் இல்லை. அதனால், இந்த மரத்தை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு சட்டபூர்வமானது கிடையாது. இந்த உத்தரவின் காரணமாக, தற்போது உள்ள சுற்றுச்சூழலுக்கும், இந்த மரத்தை சார்ந்து இருக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சீமை கருவேல மரத்தை வெட்டுவதாக இருந்தால், அதுகுறித்து சட்டம் இயற்ற வேண்டும்.
சென்னை, கிண்டியில் 630 ஏக்கர் நிலப்பரப்பில் ஐ.ஐ.டி. மற்றும் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு ஏராளமான சீமை கருவேல மரங்களும் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் தாக்கிய ‘வார்தா’ புயலினால், இந்த வளாகத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விழுந்தன. தற்போது சீமை கருவேல மரங்களையும் வெட்டத் தொடங்கினால், அங்கு சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும்.
சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருப்பது காடுகளை அழிப்பதற்கு சமமானது ஆகும். எனவே, தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு தடை விதிக்கவேண்டும். அதை அகற்றுவதால் ஏற்படக்கூடிய பாதிப்பை ஆய்வுசெய்ய ஒரு நிபுணர்கள் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் விசாரித்த நீதிபதிகள், சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று 2 நீதிபதிகளை கொண்ட அமர்வு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும். மே 11ம் தேதி வரை அதுவரை சீமை கருவேல மரங்களை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளனர்.
கருவேல மரங்களால் எத்தனையோ நன்மை இருக்க அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எப்படி நிரூபிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதுபோன்ற முடிவுகளை நன்கு ஆய்வு செய்தே செயல்படுத்த வேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கருவேலமரங்கள்தான் மக்களின் சொத்து. அதனை வெட்டித்தான் விறகாகப் பயன்படுத்துவார்கள். பெரிய கருவேலமரங்களின் நிழலில் தான் குழந்தைகள் விளையாடும். அந்த நிழலில்தான் கூட்டாஞ்சோறு செய்து சாப்பிடுவார்கள்.
இப்போது திடீரென்று கருவேலமரங்கள் மக்களின் வில்லன் ஆனது எப்படி? இதனை ஆய்வு செய்துதான் முடிவு எடுக்க வேண்டும். இதனை வெட்டி சீர்படுத்தவேண்டுமெனில் அரசுதான் செய்ய வேண்டும். அதனையும் பொதுமக்களின் தலையிலேயே கட்டக்கூடாது. ஏற்கனவே வறட்சி பாதித்த மக்கள் மீது இந்த பணியையும் செய்ய நிர்பந்திப்பது மேலும் சுமையாகும். நீதிமன்றங்கள் உரிய வழிகாட்ட வேண்டும்.
-மீராப்ரியன்

Comments
Post a Comment