Posts

Showing posts from April, 2017

சீமைக்கருவேல மரங்கள் வில்லனா, நண்பனா?

  சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பான தனிச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்று நீதிபதிகளும் கண்காணித்து வந்தனர்.  இந்தநிலையில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு எதிராக வி.மேகநாதன் என்ற வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.   அதில், சீமை கருவேல மரம் பல்வேறு நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இந்த மரம் ஏராளமாக உள்ளது. குறிப்பாக வறட்சிப்பகுதிகளில் இந்த மரம் அதிக அளவில் வளருகிறது. இந்த மரம், எரிபொருளாகவும், நிழல் தரும் மரமாகவும் திகழ்கிறது. மண்ணின் உறுதித்தன்மையை பாதுகாக்கவும், காற்றின் வேகத்தை குறைப்பதற்கும் இந்த மரம் உதவியாக இருக்கிறது. பெரும்பாலான கிராமப்புறங்களில், இந்த மரத்தை விறகாக பயன்படுத்துகின்றனர். இந்த மரத்தை வெட்டி விறகாக விற்பனை செய்பவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது.   கருவேலம் மரம் வளர்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட...

பயங்கர வான்வழித் தாக்குதல்: சிரியா ஆக்கிரமிப்பு போரில் இஸ்ரேலும் இணைந்தது!

 சிரியா பிரச்சினையில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தலையிட்டுள்ள நிலையில் இஸ்ரேலும் வான்தாக்குதல்கள் நடத்தி ஆக்கிரமிப்பு போர் புரிந்துவருகிறது. இதன் காரணமாக சிரியா சின்னாபின்னமாகி வருகிறது.  அங்கு தலைநகர் டமாஸ்கஸ்சில் இருந்து 25 கி.மீ. தொலைவில், சர்வதேச விமான நிலையம் உள்ளது. அந்த விமான நிலையத்தின் வெளியே நேற்று அதிகாலை 4 மணிக்கு அதிர்வெடி சத்தம் கேட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதியே குலுங்கியது. பெரிய கரும்புகை மண்டலமும் உருவானது. ‘‘இது வான் தாக்குதலா அல்லது தரைவழி தாக்குதலா என உறுதிசெய்ய முடியவில்லை’’ என்று சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.  அதே நேரத்தில் கடந்த காலங்களில் இஸ்ரேல் போர் விமானங்கள் டமாஸ்கஸ் விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தி உள்ளன. ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் காரணம் கூறுகிறது. இதுபற்றி ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் அல் மனார் டெலிவி‌ஷன் கூறுகையில், ‘‘டமாஸ்கஸ் விமான நிலையத்துக்கு வெளியே நேரிட்ட வெடிப்பு, இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலால் நிகழ்ந்து இருக்கலாம்’’ என த...

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் காற்றில் பறந்த ஜனநாயகம்!

 ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில், மாநில ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு அமர்வின் கடைசி நாளான இன்றைய கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் துணை கொறடா துணைக் கேள்வி எழுப்ப முயன்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் உத்தரவின்பேரில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 14 எம்.எல்.எ.க்கள் அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். அவையும் ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் சபை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது என சபாநாயகர் எச்சரித்தார். அத்துடன், 14 எம்.எல்.ஏ.க்களையும் ஓராண்டுக்கு சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என ஆளுங்கட்சி கொறடா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின்மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 14 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஓராண்டுக்கு சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.   பின்...

திருவாரூரில் ஸ்டாலின் கைது!

 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான இன்றைய போராட்டம் வெற்றிக்கரமான முறையில் நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டங்களின் முக்கிய பெருநகரங்கள், சிற்றூர்கள் உள்ளிட்ட பகுதிகிளில் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் முக்கிய வெறிச்சோடி காணப்படுகின்றன.  அரசு பேருந்துகளும் மிக குறைவான அளவிலேயே இயங்குகின்றன. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி போன்ற பொது போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இன்று காலை நிலவரப்படி தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான இன்றைய மறியல் போராட்டம் மிக வெற்றிக்கரமான போராட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு மற்றும் மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள் அனைவரையும் போலீசார் அத...

காஷ்மீரில் மீண்டும் கலவரம்: முதல்வர் மெகபூபா பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்து முதல்வர் மெகபூபா பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  காஷ்மீர் மாநிலத்தில் பி.டி.பி - பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் எம்.பி. இடைத் தேர்தலில் அதிக அளவு வன்முறை சம்பவம் நடந்தது. குறைந்த அளவு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பி.டி.பி வெற்றி வாய்ப்பை இழந்தது. மேலும் காஷ்மீரில் ராணுவம் பொதுமக்கள் மீது தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ராணுவ வீரர்களின் செயலைக் கண்டித்து இளைஞர்கள் தொடர்ந்து கல்வீசி தாக்குகிறார்கள். அப்பாவிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி இந்த கல்வீச்சு சம்பவம் நடக்கிறது. இதுகுறித்து மெஹபூபா கட்சி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காஷ்மீர் முதல்வரும், பி.டி.பி. கட்சி தலைவருமான மெகபூபா இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அவர் மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமரிடம் ஆலோசித்தார். காஷ்மீருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும், பேச்சு வார்த்தை நடத்துவதுதான் தீர்வு என்றும் ...

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா

 ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி வடகொரியா 5 முறை அணு ஆயுதங்களை சோதித்துள்ளது. தொடர்ந்து ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த 15-ம் தேதி அந்த நாட்டின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 105-வது பிறந்த தினத்தையட்டி பியாங்யாங் நகரில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. வடகொரியாவின் படை பலத்தை காட்டுகிற வகையில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவி ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று எதிரிகளின் இலக்குகளை தாக்கும் வல்லமைமிக்க ஏவுகணைகள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில், வடகொரியா மறுநாள் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. பல்வேறு முறை எச்சரிக்கை விடுத்தும் வடகொரியா அதனை கண்டு கொள்வது கிடையாது.   இதனையடுத்து வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் போர் கப்பல் அணியை கொரிய தீபகற்பத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து அங்கு போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த அணி அடுத்த சில நாட்களில் கொரிய தீபகற்பத்துக்கு போய்ச்சேரும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மே...

குழந்தைகளுக்கு இதயத்தில் துளை: 7 நோயாளிகளுக்கு சிகிச்சை ஸ்டான்லி மருத்துவனை சாதனை!

பிறவியிலேயே இதயத்தில் துளை காணப்பட்ட 7 நோயாளிகளுக்கு 7 மணி நேரத்தில் சிகிச்சை அளித்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.  குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் இதய பாதிப்புகளில் இதய சுவரில் துளை காணப்படுவது முக்கியமானதாகும். 10 லட்சம் குழந்தைகள் பிறப்பில் 950 பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மருத்துவமனையின் இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், பேராசிரியர் சி.மூர்த்தி ஆகியோர் கூறியதாவது:  இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சு பகுதியைத் திறந்து அறுவைச் சிகிச்சை செய்யும் முறையே பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் அறுவைச் சிகிச்சையில்லாத செயல்முறை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதன்படி, நோயாளியின் வலது காலின் வழியே ஒரு குழாய் செருகப்படும். அதன் வழியாக வலை போன்ற ஒரு சாதனம் செலுத்தப்படும். இந்தக் குழாய் இதயத்தில் காணப்படும் துளையின் வழியாக மறுபுறத்துக்கு செலுத்தப்படும். அதன் பின்பு குழாயை அகற்றும் வகையில் பின்புறமாக இழு...

தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்!

1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் மதநல்லிணக்கத்திற்கும் விழுந்த பேரிடியாகும். இது கறுப்பு நாள் என்று பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. தமிழகத்தில் மதவேறுபாடின்றி அனைத்து பத்திரிகைகளும் கண்டித்து எழுதின.  அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் மீண்டும் மசூதி கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வழக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவருவது மிகவும் வேதனையான விஷயமாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காததோடு மேலும் மேலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.  பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. ரேபரேலி கோர்ட்டில் நடந்த விசாரணைக்குப் பிறகு அத்வானி உள்ளிட்ட அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டனர்.  இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் அந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதால்,  இதனால் அத்வ...

பாபர் மஸ்ஜித் இடிப்பு: அத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!

பாபர்  மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில், 2 வருடத்திற்குள் வழக்கை மீண்டும் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று லக்னோ மற்றும் ரேபரலி நீதிமன்றங்களுக்கு உத்தரவிடுகிறோம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1992ம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள, பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.  விசாரணையில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் ரேபரலி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். அலகாபாத் ஹைகோர்ட்டும் மேல்முறையீட்டின்போது, இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. கூட்டு சதி வழக்கிலிருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருக்க கூடாது, இந்த வழக்கை திரும்ப விசாரிக்க வேண்டும் என்று கூறி, இவர்களின் விடுதலையை எதிர்த்து சிபிஐ, சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. இந்த முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  25 வ...

கேரளா மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றிமுகம்

 மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்கியது. பகல் 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி சுமார் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் இருக்கிறார்.  காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான அகமது நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதையடுத்து அவர் வெற்றி பெற்ற மலப்புரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 12-ம் தேதி அங்கு ஓட்டுப் பதிவு நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் குஞ்சாலிகுட்டி வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் பைசலும், பி.ஜே.பி. கூட்டணி சார்பில் ஸ்ரீபிரகாசும் போட்டியிட்டனர்.  இடைத்தேர்தலில் இத்தொகுதியில் 71.33 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் எண்ணும் பணி மலப்புரம் அரசு கல்லூரியில் முதல் கட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம் வெளியானது. இதில் தொடக்கம்...