கேரளா மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தல்: முஸ்லிம் லீக் வேட்பாளர் வெற்றிமுகம்
மலப்புரம் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி தொடங்கியது. பகல் 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி சுமார் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் இருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான அகமது நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து அவர் வெற்றி பெற்ற மலப்புரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. கடந்த 12-ம் தேதி அங்கு ஓட்டுப் பதிவு நடந்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் குஞ்சாலிகுட்டி வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி சார்பில் பைசலும், பி.ஜே.பி. கூட்டணி சார்பில் ஸ்ரீபிரகாசும் போட்டியிட்டனர்.
இடைத்தேர்தலில் இத்தொகுதியில் 71.33 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இந்த ஓட்டுகள் எண்ணும் பணி மலப்புரம் அரசு கல்லூரியில் முதல் கட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம் வெளியானது. இதில் தொடக்கம் முதலே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி முன்னிலை பெற்றார். 2-வது இடத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் பைசலும், 3-வது இடத்துக்கு பி.ஜே.பி. வேட்பாளர் ஸ்ரீபிரகாசும் தள்ளப்பட்டனர். முதல் சுற்று முடிவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பைசலை விட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி 3 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார்.
அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவில் இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பகல் 10 மணி அளவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பைசலை விட காங்கிரஸ் கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் குஞ்சாலிகுட்டி சுமார் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் இருந்தார்.

Comments
Post a Comment