தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்!
1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் மதநல்லிணக்கத்திற்கும் விழுந்த பேரிடியாகும். இது கறுப்பு நாள் என்று பல பத்திரிகைகள் தலையங்கம் எழுதின. தமிழகத்தில் மதவேறுபாடின்றி அனைத்து பத்திரிகைகளும் கண்டித்து எழுதின.
அப்போது பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் மீண்டும் மசூதி கட்டப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த வழக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவருவது மிகவும் வேதனையான விஷயமாகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காததோடு மேலும் மேலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில், கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. ரேபரேலி கோர்ட்டில் நடந்த விசாரணைக்குப் பிறகு அத்வானி உள்ளிட்ட அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் அந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டதால், இதனால் அத்வானி உள்ளிட்டோர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அதேசமயம், கூட்டு சதி வழக்கிலிருந்து அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டிருக்க கூடாது, இந்த வழக்கை திரும்ப விசாரிக்க வேண்டும் என்று கூறி இவர்களின் விடுதலையை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகியது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிரடி தீர்ப்பை அளித்தது. அதில் அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்களை மறுபடியும் விசாரிக்க உத்தரவிட்டது. 25 வருடமாக ஒரு வழக்கில் முடிவு வரவில்லை என்பது வழக்கு தொடர்ந்தவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே 2 வருடத்திற்குள் இந்த வழக்கை மீண்டும் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று லக்னோ மற்றும் ரேபரலி நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் சம்பத் ராய் பன்சால், சதீஷ் பிரதான், தரம் தாஸ், மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், மஹமத்லேஸ்வர் ஜகதீஷ் முனி, ராம் பிலாஸ் வேதாந்தி, வைகுந்த் லால் சர்மா, சதீஷ் சந்திர நகர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.
அத்வானி மீதான வழக்கு மீண்டும் உயிர் பெற்றுள்ளதால் அவரை ஜனாதிபதியாக்கும் பாஜக முடிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தது 2 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. வலுவான குற்றச்சாட்டுகள் அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கள் கடுமையானவை. மதப் பிரிவுகளுக்கு இடையே பகையை மூட்டுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகள் அவர் மீது போடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வரை கிடைக்கும். இதேபோல மத வழிபாட்டுத் தலத்தை உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே அவமதித்தல், அதை தாக்கி மனங்களைப் புண்படுத்துதல் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். இதுதவிர மேலும் சில குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
அவற்றுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை வரை கிடைக்கும். மொத்தமாக அத்வானி உள்ளிட்டோருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதை பயங்கரவாத தாக்குதல் என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. அதேபோலத்தான் பாபர் மசூதி இடிப்பும் பயங்கரவாத தாக்குதல்தான்.
இந்த இடிப்புக்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு இடங்களில் மதக்கலவரங்கள் மூண்டன. இதில் அனைத்து சமுதாய மக்களும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக சிறுபான்மை மக்கள் பலரின் உயிர் பறிக்கப்பட்டது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் அரசியல் செல்வாக்கோடு இருப்பதால் தமது செயலுக்கு மன்னிப்பு கேட்காததோடு இறுமாப்போடும் பேசுகிறார்கள். இது சொத்து சம்பந்தமான வழக்காகப் பார்க்காமல் இந்த குற்றச்செயலைச் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்பு குற்றச்செயல்கள், மத துவேஷ சண்டைகள், மதக்கலவரங்கள் நடைபெறாது. சிறுபான்மையினர் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

Comments
Post a Comment