காஷ்மீரில் மீண்டும் கலவரம்: முதல்வர் மெகபூபா பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

காஷ்மீரில் மீண்டும் ஏற்பட்டுள்ள கலவரம் குறித்து முதல்வர் மெகபூபா பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 காஷ்மீர் மாநிலத்தில் பி.டி.பி - பி.ஜே.பி. கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு சமீபத்தில் நடந்த ஸ்ரீநகர் எம்.பி. இடைத் தேர்தலில் அதிக அளவு வன்முறை சம்பவம் நடந்தது. குறைந்த அளவு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பி.டி.பி வெற்றி வாய்ப்பை இழந்தது.
மேலும் காஷ்மீரில் ராணுவம் பொதுமக்கள் மீது தாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 ராணுவ வீரர்களின் செயலைக் கண்டித்து இளைஞர்கள் தொடர்ந்து கல்வீசி தாக்குகிறார்கள். அப்பாவிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டி இந்த கல்வீச்சு சம்பவம் நடக்கிறது.

இதுகுறித்து மெஹபூபா கட்சி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காஷ்மீர் முதல்வரும், பி.டி.பி. கட்சி தலைவருமான மெகபூபா இன்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அவர் மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமரிடம் ஆலோசித்தார். காஷ்மீருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும், பேச்சு வார்த்தை நடத்துவதுதான் தீர்வு என்றும் மெகபூபா பிரதமரிடம் வலியுறுத்தினார். 

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா