Posts

Showing posts from May, 2021
தளர்வு இல்லாத ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் சாதாரண ஏழை மக்கள், சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அவர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள். கொரோனா தொற்று நோயைக் குறைப்பதற்கு ஊரடங்கு தீர்வு அல்ல. வேண்டுமானால் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தலாம். மேலும் ஆங்கில மருத்துவத்தையே நம்பிக் கொண்டு இருக்காமல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ முறைகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தினால் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி மரணம் அடைந்தார். ஆக்சிஜன் கொடுப்பதை மருத்துவர் நிறுத்தியதால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக அவரது மனைவி புகார் !
ஊரடங்கு அறிவித்து விட்டு காய்கறி - பழங்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதாக அரசு கூறினாலும் கிராமங்களில் அந்த வசதி இருப்பதை அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ கண்காணிக்கவில்லை! காரைக்குடி அருகே உள்ள கிராமங்களில் இந்த நிலை தான். ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகளைத் திறந்தது ஏன் ? மக்கள் எப்படி அங்கு வருவார்கள் ? கொரோனா பற்றி அச்சுறுத்தி மக்களை வெளியில் வராதீர் என கூறுவோர் அவர்களுக்கு என்ன வசதிகள் செய்துள்ளனர் ? மின்சார அளவீடு செய்வது கூட பொது மக்களே செய்ய வேண்டும் என்று சொல்வது நியாயமே அல்ல! சம்பந்தப்பட்ட துறையினருக்கு என்ன தான் வேலை ?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையிலும் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும் தொழிலாளர் அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கு தொடர்ந்து அதிமுகவில் துரோகம் நடப்பதாக கூறப்படுகிறது! கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்! மேலும் அவர் மீது லஞ்சம் வாங்கியதாக அவரது உதவியாளரே புகார் கூறியுள்ளார். இதனை மறுத்து நிலோபர் கபில் பேட்டி அளித்துள்ளார். முதல்வராக இருந்த பழனிச்சாமி மீதும் திமுக ஊழல் புகார் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்!