முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையிலும் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலும்
தொழிலாளர் அமைச்சராக இருந்த நிலோபர் கபிலுக்கு தொடர்ந்து அதிமுகவில் துரோகம் நடப்பதாக கூறப்படுகிறது!
கடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்! மேலும் அவர் மீது லஞ்சம் வாங்கியதாக அவரது உதவியாளரே புகார் கூறியுள்ளார். இதனை மறுத்து நிலோபர் கபில் பேட்டி அளித்துள்ளார். முதல்வராக இருந்த பழனிச்சாமி மீதும் திமுக ஊழல் புகார் கூறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்!
கொரோனா தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாவட்டங்களில் மால்கள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி, வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கவும் - மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது!
Comments
Post a Comment