தளர்வு இல்லாத ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் சாதாரண ஏழை மக்கள், சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அவர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்.
கொரோனா தொற்று நோயைக் குறைப்பதற்கு ஊரடங்கு தீர்வு அல்ல. வேண்டுமானால் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தலாம்.
மேலும் ஆங்கில மருத்துவத்தையே நம்பிக் கொண்டு இருக்காமல், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவ
முறைகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து பயன்படுத்தினால் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாவட்டங்களில் மால்கள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி, வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கவும் - மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது!
Comments
Post a Comment