ஊரடங்கு அறிவித்து விட்டு காய்கறி - பழங்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்வதாக அரசு கூறினாலும் கிராமங்களில் அந்த வசதி இருப்பதை அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ கண்காணிக்கவில்லை!
காரைக்குடி அருகே உள்ள கிராமங்களில் இந்த நிலை தான்.
ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகளைத் திறந்தது ஏன் ? மக்கள் எப்படி அங்கு வருவார்கள் ?
கொரோனா பற்றி அச்சுறுத்தி மக்களை வெளியில் வராதீர் என கூறுவோர் அவர்களுக்கு என்ன வசதிகள் செய்துள்ளனர் ? மின்சார அளவீடு செய்வது கூட பொது மக்களே செய்ய வேண்டும் என்று சொல்வது நியாயமே அல்ல! சம்பந்தப்பட்ட துறையினருக்கு என்ன தான் வேலை ?
கொரோனா தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாவட்டங்களில் மால்கள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி, வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கவும் - மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது!
Comments
Post a Comment