மும்பையில் பருவ மழை தொடங்கியது! கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் இப்போது பருவ மழையால் பாதிக்கும் நிலை உள்ளது. தலைநகரம் மும்பையில் இப்போது கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது!
கொரோனா தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாவட்டங்களில் மால்கள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி, வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கவும் - மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது!
Comments
Post a Comment