ஊடகப் பார்வை !
******
ஜீ தமிழ் டிவியில் சத்யா தொடரில் சாத்தான்குளத்தில் போலீஸ் நிலையத்தில் தந்தை - மகன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து காட்சி ஒளிபரப்பானது ! சித்திரவதை செய்வதை கதாநாயகி சத்யா தடுத்து சண்டை இடுகிறாள்...
அதில் காவல் நிலையத்தில் கைதி சித்திரவதையை தடுக்கும் ஏ.சி.- காவல் இணை ஆணையராக நடித்த ஆகாஷ் ( நீதானே என் பொன் வசந்தம் தொடர் கதாநாயகன் ) சிறப்பு தோற்றத்தில் வருகிறார் !
அவர் பேசும் '' போலீசைப் பார்த்து பொதுமக்கள் ஏன் பயப்பட வேண்டும் ? கிரிமினல் ( குற்றவாளிகள் ) தான் பயப்பட வேண்டும் ! " என்ற வசனம் அருமை ! சமூக அக்கறையுடன் துணிச்சலான காட்சி
எடுத்த இயக்குனர்
பாராட்டுக்குரியவர் !
- மீராப்பிரியன்
கொரோனா தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாவட்டங்களில் மால்கள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி, வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கவும் - மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது!
Comments
Post a Comment