மாநில அரசுகளுக்கு 75 சதவீத தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மண் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்!
இதன் மூலம் தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கு ஒன்றிய அரசுக்கே உரிமை உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாவட்டங்களில் மால்கள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி, வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கவும் - மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது!
Comments
Post a Comment