Posts

Showing posts from June, 2021
காரைக்குடி- இலுப்பைக்குடி பகுதிகளில் இன்று மதியம் முதல் மாலை வரை திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்!
தமிழ் மொழியில் கற்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை ! ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதி.
கொரோனா தொற்று குறைந்த 30 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாவட்டங்களில் மால்கள், ஜவுளிக் கடைகள் திறக்க அனுமதி, வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிக்கவும் - மாவட்டத்திற்குள் பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது!
தமிழ்நாடு டெல்டா மண்டலத்தில் ஹைட்ரொ கார்பன் திட்டம் தொடங்க இருப்பதை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்! - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
மும்பையில் பருவ மழை தொடங்கியது! கொரோனாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலம் இப்போது பருவ மழையால் பாதிக்கும் நிலை உள்ளது. தலைநகரம் மும்பையில் இப்போது கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஓடுகிறது. போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது!
மாநில அரசுகளுக்கு 75 சதவீத தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மண் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்! இதன் மூலம் தடுப்பூசி வெளிநாடுகளில் இருந்து வாங்குவதற்கு ஒன்றிய அரசுக்கே உரிமை உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.