Posts

Showing posts from May, 2017

இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக்!

Image
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிஃபாத் ஷாரூக் என்ற அந்த இளைஞர் வடிவமைத்துள்ள செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம் மட்டுமே. இந்தியாவின் இளம் விஞ்ஞானி என்ற பட்டம் வெற்ற இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 750 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். அறிவு திறமைக்கும், பள்ளி தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று நிருபித்துள்ளார், இந்த இளம் விஞ்ஞானி.  இவர் வடிவமைத்துள்ள சிறிய வடிவிலான செயற்கைக்கோள் வரும் ஜூன் 21ம் தேதி விண்ணில் பறக்கிறது. 240 நிமிடங்கள் மட்டுமே விண்ணில் இருக்கும் இந்த செயற்கைக் கோள் முப்பரிமாண கார்பன் ஃபைபரின் இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும். இம்மாணவனின் அறிவியல் திறன் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மைய ஆராய்ச்சியாளர்களால் பாராட்டப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு, ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.  ஆந்திரா மாநிலம் திருப்பதி வெங்கடேஷ்வரா பல்கலையில், வானியல் பேராசிரியராக பணியாற்றி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் முகம்மது ரிஃபாத் ஷாருக்ராஜ், (வயது 17) பள்ளப்பட்டி கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் ...

இந்தியாவில் 13.5 கோடி பேரின் ஆதார் தகவல்களுக்கு ஆபத்து!

  அனைத்துக்குமே ஆதார் அட்டைகள் பயன்படுத்தும் நிலையால் தனி நபர் தகவல்கள் பரவலாக விநியோகிக்கப்படும் நிலை உள்ளது. மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்றது. உச்சநீதிமன்றமோ இதற்கு ஆதார் கட்டாயமில்லை என்று உத்தரவிட்டது. மேலும் செல்பேசி சிம்கார்டுகள் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று நீதிமன்றமே கூறியது. ஜியோ சிம்கார்டு பெறுவதற்கு ஆதார் அட்டையைத்தான் கேட்கிறார்கள். இதனால் தனிநபர் உரிமை பாதுக்காக்கப்படும் நிலை குறைந்துள்ளது.   ஒரு நிறுவனத்திற்கு சென்று உங்கள் பெயரைச் சொன்னால் உங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் அவர்கள் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களின் தனியுரிமையை பாதிக்கும் செயலாகும். மோசடிப்பேர்வழிகள் இதனை தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் குற்றங்கள் பெருகும். இதன் மூலம் வங்கிகளில் உள்ள பணம் டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கப்படலாம்.   சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை ஒன்றில் வெளியான தகவல்களில் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் மூலம் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் வெளியாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் குறைந்த அளவு பாதுகாப்பு நடைமுறைகளே...

துருக்கி அதிபருக்கு இந்தியாவில் சிகப்பு கம்பள வரவேற்பு !

Image
  துருக்கி நாட்டு அதிபருக்கு அதிக அதிகாரம் அளிப்பதற்காக அந்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் அதிபர் தய்யிப் உர்துகான் அமோக வெற்றி பெற்றார்.  இந்த நிலையில் தனது மனைவி எமி உர்துகான் மற்றும் துருக்கி நாட்டு முக்கிய அமைச்சர்கள், உயரதிகாரிகள் என சுமார் 150 பேர் அடங்கிய குழுவினருடன் இந்தியா வந்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள துருக்கி அதிபர் தய்யிப்  உர்துகானுக்கு டெல்லியில்  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.     இன்று காலை டெல்லி  குடியரசு தலைவர் மாளிகையில் தய்யிப் உர்துகானுக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுகொண்ட அவர் டெல்லி ராஜ்கட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.   பின்னர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். இந்தியா - துருக்கி இடையிலான பல்வேறு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு...