பிக்பாஸ்- சபாஷ் பொன்னம்பலம்! தொலைக்காட்சியில் பரபரப்பை ஏற்படுத்த கோடிகளை அள்ள நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை நேயர்கள் உண்மை என நினைத்து ஏமாறுகிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். விஜய் டிவியில் நடிகர் கமல் தலைமை ஏற்று நடத்துகிறார். இதில் நடிப்பவர்களிடையே ஒழுக்கம்& கட்டுப்பாடு ஏதும் இல்லை என நேயர்கள் கூறுகிறார்கள். அதில் இருந்து சில காட்சிகள்: பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார் மமதி சாரி. இதையடுத்து அனந்த் வைத்தியநாதனை வெளியேற்றினார்கள். அவர் வெளியே செல்லும் முன்பு அவருக்கு ஒரு அதிகாரம் கொடுத்தார் கமல். அதாவது தவறாக நடந்த யாராவது ஒருவரை சிறையில் தள்ளும் அதிகாரம் அனந்த் வைத்தியநாதனுக்கு கொடுக்கப்பட்டது. அனந்த், "தாங்கள் எந்த மாதிரியான உடை அணிய வேண்டும், ஆண்களுடன் எப்படி பழக வேண்டும் என்பது பெண்களுக்கு நன்றாக தெரியும். அப்படி இருக்கும் போது அவர்களை பற்றி தவறாக பேசிய பொன்னம்பலத்தை சிறையில் அடைக்குமாறு கூறுகிறேன்" என்றார் அனந்த். இது பெண்களின் பாராட்டைப் பெறுவதற்காக இப்படி அவர் கூறியிருக்கலாம். பிக் பாஸ் வீட...