உலமாக்கள்மற்றும் பணியாளர்கள் நல வாரிய நலத்திட்ட உதவிகள்!
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக பொருளாதார மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ் தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியுடையவராவர். உறுப்பினார்கள் 18 வயது நிறைவு செய்து 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். பதிவு பெற்ற உறுப்பினருக்கு ஓர் அடையாள அட்டை கட்டணமின்றி வழங்கப்படும். உறுப்பினர் பதிவு செய்து 3 ஆண்டுகள் முடியும் தருவாயில் பதிவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் விவரம்: கல்வி உதவித்தொகை (10ஆம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை அவரவர் பாடப்பிரிவி...